Published:Updated:

`சிறுமிக்குப் பாலியல் கொடுமை; இறந்தநிலையில் பிறந்த சிசு!' -போலீஸில் சிக்கிய தூத்துக்குடி திமுக பிரமுகர்

Representational image
Representational image

பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க பிரமுகர், போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் ராஜ் (48). டி.வி மெக்கானிக்காக உள்ள இவர் தூத்துக்குடி முன்னாள் ஒன்றிய கலை, இலக்கிய அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்திருக்கிறார். அவ்வப்போது கோயில்களில் நடக்கும் பூஜைகளுக்கும் சென்று வருவார். இதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவர், டி.வி பார்ப்பதற்காக அடிக்கடி ராஜுவின் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம்.

ராஜ்
ராஜ்

இந்நிலையில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதில், மாணவி கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், தான் கர்ப்பமடைந்ததுகூடத் தெரியாமல் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் மாணவிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு 6 மாதப் பெண் சிசு, இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இறந்த சிசுவை மாணவியின் பெற்றோர் வீட்டுக்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் புதைத்துள்ளனர். அதன்பிறகு மாணவியிடம் விசாரித்தபோதுதான், கர்ப்பத்துக்குக் காரணம், அதே தெருவில் வசித்து வரும் டி.வி மெக்கானிக் ராஜ் என்பது தெரியவந்தது. இதற்கிடையில், பள்ளி மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்த விவகாரமும் அந்த சிசு புதைக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலியல் வன்முறைக்கு ஆளான 10 வயது சிறுமி!- மதுரையில் முதியவரை போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

புதுக்கோட்டை காவல்நிலைய போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி, டி.வி மெக்கானிக் ராஜை, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதைக்கப்பட்ட சிசுவைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், `பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் விவசாய வேலைக்காகக் காலையில் போய்விட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். இந்த மாணவி பக்கத்துல உள்ள பள்ளியில்தான் 11-ம் வகுப்பு படிக்கிறாள். அடிக்கடி அந்த டி.வி மெக்கானிக் ராஜ் வீட்டுக்குப் போயிட்டு வருவாள். எல்லாத்தையும் காமெடியாப் பேசி சிரிக்க வைப்பதில் கில்லாடி அந்த ராஜ்.

முடிவைத்தானேந்தல்
முடிவைத்தானேந்தல்

அந்தப் பொண்ணோட அப்பா வயசுதான் அவருக்கும் ஆகுது. நல்லா பழகிட்டு இருக்கிறவர்தானேன்னு நம்பிக்கையா வீட்டுக்கு அனுப்பிய புள்ளைய, எப்படிச் சீரழிக்க மனசு வந்துச்சோ. `வயித்த வலிக்குது'ன்னு புள்ள சொல்லும்போதே ஆஸ்பத்திரியில் காட்டியிருந்தா அப்பவே விவகாரம் தெரிஞ்சிருக்கும்.

வயித்தவலிக்கு அடிக்கடி மாத்திரைய வாங்கிக் கொடுத்திருக்கா அந்தப் புள்ளையோட அம்மா. அவங்க வீட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்குறதுக்காகவே அடிக்கடி அந்தப் புள்ள வீட்டுக்கும் போயி நல்லா பேசி சந்தேகம் வராம இருந்திருக்கான், அந்த ராஜ். தி.மு.க-வுல இருக்குறதுனால, `இந்த விசயத்தை வெளியே சொன்னா குடும்பத்தோட கொன்னுடுவேன்'னும் மிரட்டினானாம்.

முடிவைத்தானேந்தல்
முடிவைத்தானேந்தல்

அவனுக்கு 22 வயசுல ஒரு மகனும் 21 வயசுல மகளும் இருக்காங்க. மகளுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வச்சுருக்கான் அந்த ராஜ்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு