Published:Updated:

தற்கொலைக்கு முயன்ற 3 சிறுமிகள்; இருவர் பலி... அதிர்ச்சியளித்த வெவ்வேறு காரணங்கள்!

விஷம் குடித்து தற்கொலை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூன்று பள்ளிச் சிறுமிகள் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயன்றதில் இருவர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலைக்கு முயன்ற 3 சிறுமிகள்; இருவர் பலி... அதிர்ச்சியளித்த வெவ்வேறு காரணங்கள்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூன்று பள்ளிச் சிறுமிகள் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயன்றதில் இருவர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விஷம் குடித்து தற்கொலை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமிகள் மூன்று பேர், நேற்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டைவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் 120 கி.மீ தொலைவிலுள்ள இந்தூருக்குப் பேருந்தில் சென்றிருக்கிறார்கள். அங்கு பன்வர்குவான் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அருகிலிருக்கும் தோட்டத்தில் மூன்று சிறுமிகளும் விஷமருந்தி, ஆபத்தான நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

விஷம்
விஷம்

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கூடுதல் காவல்துறை அதிகாரி பிரசாந்த் சௌபே, "சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனைச் சந்திக்க இந்தூர் புறப்பட்டிருக்கிறார். மேலும், அந்தச் சிறுமி, ஒருவேளை காதலன் தன்னைச் சந்திக்க மறுத்தால் தற்கொலை செய்துவிடலாம் என்று எண்ணி விஷத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார். அந்தச் சிறுமியுடன் இரண்டு தோழிகளும் உடன் சென்றிருக்கின்றனர். இந்தூருக்கு வந்த பிறகு, அவர்கள் சிறிது நேரம் சுற்றித் திரிந்துவிட்டு, சிறுமி தன் காதலனைச் சந்திக்க முயன்றிருக்கிறார்.

அது நடக்காமல் போகவே, விஷமருந்த முடிவுசெய்திருக்கிறார். பின்னர் பன்வர்குவான் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அருகிலிருக்கும் தோட்டத்துக்கு வந்த மூவரும் விஷம் குடித்திருக்கிறார்கள். அதன் பிறகே அவர்கள் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே இருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காவல்துறை
காவல்துறை

பின்னர் இதில் உயிர்பிழைத்த சிறுமி வாக்குமூலத்தில், தன் தோழியின் காதலன் அவளுடன் பேசாததால் தற்கொலை செய்துகொண்டதாகவும், இரண்டாவது தோழி குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்ததாகவும் கூறினார். மேலும், தன்னுடைய தோழிகள் இருவரும் விஷம் குடித்ததால், தானும் விஷமருந்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சிறுமிகளின் குடும்பத்தினர் இந்தூரை வந்தடைந்திருக்கின்றனர்" என்று கூறினார்.