Published:Updated:

`கலர் கலரான மாத்திரைகள்; மிடுக்கான தோற்றம்!’ - ராணிப்பேட்டையைப் பதறவைத்த 3 போலி மருத்துவர்கள்

கைப்பற்றப்பட்ட மாத்திரைகளுடன் போலி மருத்துவர்
கைப்பற்றப்பட்ட மாத்திரைகளுடன் போலி மருத்துவர்

ராணிப்பேட்டை அருகே மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஏழை மக்களை குறிவைத்து போலி மருத்துவர்கள் `புற்றீசல்’ போன்று வீதிக்கு வீதி வலம் வருகிறார்கள். காய்ச்சல் சீசன் வந்துவிட்டால் போதும் `டிப்டாப்’ உடை அணிந்து நடமாடும் மருத்துவர்களாகவும் கிராமப்புறங்களில் முகாமிடுகிறார்கள்.

சீல் வைக்கப்படும் கிளினிக்
சீல் வைக்கப்படும் கிளினிக்

இந்த நிலையில், கொரோனா நேரத்திலும் போலி மருத்துவர்கள் மிடுக்குடன் சுற்றித்திரிவது சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் `சக்தி ஹெல்த் கேர்’ என்ற பெயரில் கிளினிக் நடத்திவந்த மாதவன் என்ற போலி மருத்துவர் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் போலி மருத்துவர்கள்... வாடகை வீட்டில் போலி நர்ஸிங் கல்லூரி...

இந்த நிலையில், அதே ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் மூன்று போலி மருத்துவர்கள் இன்று காலை சிக்கியிருக்கிறார்கள். திமிரியை அடுத்த காவனூர் கிராமத்தில் தனியார் மருத்துவர்கள் சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்து கொடுப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக 5 குழுக்களாகப் பிரிந்த அதிகாரிகள் திமிரிப் பகுதிக்கு விரைந்தனர்.

சீல் வைக்கப்படும் மற்றொரு கிளினிக்
சீல் வைக்கப்படும் மற்றொரு கிளினிக்

அங்குள்ள கிளினிக்குகளை ஆய்வு செய்தபோது, காந்தி (65), பார்த்திபன் (60), வரதராஜன் (45) என்ற 3 போலி மருத்துவர்கள் சிக்கினர். அவர்கள் நடத்தி வந்த 4 கிளினிக்குகளுக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் கலர் கலரான மாத்திரைகளையும், மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று பேரையும் திமிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்கு பதிந்து அவர்களைக் கைதுசெய்தனர்.

`சுகரை குணமாக்கும் எருக்க  இலை செருப்பு?!' - பரவும் போலி வைத்தியம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
அடுத்த கட்டுரைக்கு