Published:Updated:

விழுப்புரம்: 5.5 கிலோ கஞ்சா சாக்லேட், 125 கிலோ குட்கா பறிமுதல் - 3 வட மாநிலத்தவர்கள் கைது!

கஞ்சா சாக்லேட்

``இந்த கஞ்சா சாக்லேட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா பகுதிகளில் தயார்செய்யப்பட்டிருக்கிறது." - விழுப்புரம் எஸ்.பி

விழுப்புரம்: 5.5 கிலோ கஞ்சா சாக்லேட், 125 கிலோ குட்கா பறிமுதல் - 3 வட மாநிலத்தவர்கள் கைது!

``இந்த கஞ்சா சாக்லேட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா பகுதிகளில் தயார்செய்யப்பட்டிருக்கிறது." - விழுப்புரம் எஸ்.பி

Published:Updated:
கஞ்சா சாக்லேட்

விழுப்புரம் மாவட்டத்தில், கஞ்சா மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிராக `கஞ்சா வேட்டை 3.O’ எனும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர் காவல்துறையினர். இந்த நிலையில் நேற்று முன்தினம், விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் ஆட்டோ ஸ்டேண்ட் அருகே சிலர் கஞ்சா சாக்லேட்டை விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து, டி.எஸ்.பி பார்த்திபன் மேற்பார்வையில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மூன்று வட மாநிலத்தவர்கள்
கைதுசெய்யப்பட்ட மூன்று வட மாநிலத்தவர்கள்

அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த மூன்று நபர்களிடம் விசாரித்தில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். எனவே, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் இருவர் பாண்டிச்சேரி திருபுவனைப் பகுதியில் தங்கியிருந்த அஜய் குமார், பலராமன் பாரிக் என்பதும்; காஞ்சிபுரம் மாவட்டம், படாளம் பகுதியில் தங்கியிருந்த உக்ரேசன் பாரிக் என்பதும் தெரியவந்தது. குறைந்த விலைக்கு இந்த கஞ்சா சாக்லேட்டுகளை வட மாநிலங்களிலிருந்து வாங்கி வரும் இவர்கள், தமிழகம் மற்றும் புதுவைப் பகுதிகளிலுள்ள வட மாநில நபர்களுக்கு மட்டும் சுமார் 150 ரூபாய் வரை விற்பனை செய்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. 

மேலும், அவர்களிடமிருந்து ஜார்மினால் கோல்டு கஞ்சா சாக்லேட் 5.5 கிலோ மற்றும் குட்கா 25 கிலோவைப் பறிமுதல் செய்தனர். பிறகு, மூவர் மீதும் வழக்கு பதிவுசெய்து வேடம்பட்டு மாவட்டச் சிறையில் அடைத்தனர். 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை அன்று இரவு மேற்கு காவல் நிலையத்தில் பார்வையிட்ட எஸ்.பி ஸ்ரீநாதா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "இன்று மூன்று வட மாநிலக் குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் 25 கிலோ குட்கா பொருள்களை மேற்கு காவல் நிலைய போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

எஸ்.பி பேட்டி
எஸ்.பி பேட்டி

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், திருச்சிற்றம்பலம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 100 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த கஞ்சா சாக்லேட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா பகுதிகளில் தயார்செய்யப்பட்டிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று பேரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். பல வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து, கூலி வேலைசெய்து தங்கியிருக்கின்றனர். அடிக்கடி ஒடிசாவுக்குச் சென்று வரும்போது இந்த போதைப்பொருள்களை வாங்கி வந்து, இந்தப் பகுதிகளிலுள்ள வட மாநிலத் தொழிலாளர்களிடம் விற்பனை செய்துவந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவருகிறது.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

அவர்கள் மூன்று பேரும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை முழுமையாக ஒழிப்பதற்கான முயற்சியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதுதான் விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் நோக்கம். நிச்சயம் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்" என்றார்.