Published:Updated:

ஈரோடு: `கொரோனா பெயரில் விஷ மாத்திரை; 3 பேர் பலி!’ - கடனுக்காக நடந்த சதித்திட்டம் அம்பலம்

கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள்

கடன் பிரச்னைக்காக ஒரு குடும்பத்தையே தீர்த்துக்கட்ட விஷ மாத்திரை கொடுக்கப்பட்ட சம்பவம், ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு: `கொரோனா பெயரில் விஷ மாத்திரை; 3 பேர் பலி!’ - கடனுக்காக நடந்த சதித்திட்டம் அம்பலம்

கடன் பிரச்னைக்காக ஒரு குடும்பத்தையே தீர்த்துக்கட்ட விஷ மாத்திரை கொடுக்கப்பட்ட சம்பவம், ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள கே.ஜி.வலசு சேனாங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பண கவுண்டர் (வயது 75). இவர், மனைவி மல்லிகா (வயது 55) மற்றும் மகள் தீபாவுடன் (வயது 30) வசித்துவந்தார். கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 26)) காலை சுமார் 8 மணியளவில் இவர்களது தோட்டத்துக்கு 25 வயதுடைய இளைஞர் ஒருவர் வந்திருக்கிறார். தான் கொரோனா சோதனை செய்ய வந்திருப்பதாகவும், சோதனைக்கு முன்பாக தான் கொடுக்கும் மாத்திரையைச் சாப்பிட வேண்டுமெனச் சொல்லி, மாத்திரை ஒன்றைக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே கொரோனா சோதனை செய்ய வந்திருக்கிறார் என நம்பி கருப்பண கவுண்டர், அவருடைய மனைவி மல்லிகா, மகள் தீபா, தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் (வயது 65)  ஆகிய நால்வரும் அந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டிருக்கின்றனர். நால்வரும் மாத்திரயைச் சாப்பிட்ட பிறகு, கொரோனா பரிசோதனை செய்வதைப்போல பாவ்லா காட்டிய அந்த மர்ம நபர், ‘உங்களுக்கு கொரோனா தொற்று இல்லை’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

உயிரிழந்த மல்லிகா
உயிரிழந்த மல்லிகா

அவர் சென்ற சில நிமிடங்களிலேயே மாத்திரையைச் சாப்பிட்ட நால்வருக்கும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனே உறவினர்கள், நால்வரையும் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மீதமிருந்த மூவரையும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கருப்பண கவுண்டர், அவருடைய மகள் தீபா ஆகிய இருவரையும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், குப்பம்மாளை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் தீவிர சிகிச்சைகள் கொடுத்துவந்தனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி தீபாவும்ம் குப்பம்மாளும் இறந்துபோக, கருப்பண கவுண்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் சென்னிமலை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். அப்போது கல்யாணசுந்தரம் என்னும் பக்கத்து தோட்டத்து விவசாயி போலீஸாரிடம், ‘அந்த மர்மநபர் கருப்பண கவுண்டர் வீட்டுக்கு வந்திருந்தபோது, நானும் அங்குதான் இருந்தேன். அந்த மர்மநபர் என்னிடமும் மாத்திரையைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் ஏற்கெனவே கொரோனா சோதனை செய்துவிட்டேன் எனச் சொல்லி மாத்திரையைச் சாப்பிட மறுத்துவிட்டேன். அதன் பிறகு ஊருக்கு வெளியே என்னை விட்டுவிட்டு வர முடியுமா என அவர் கேட்க, என்னுடைய பைக்கில் அழைத்துச் சென்று நான்தான் விட்டுவிட்டு வந்தேன்’ எனக் கூறியிருக்கிறார். இது போலீஸாருக்கு உறுத்தவே, கல்யாணசுந்தரத்தை துருவியெடுத்திருக்கின்றனர். போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பதறிப்போன கல்யாணசுந்தரம் ஒருகட்டத்தில் நடந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

கருப்பண கவுண்டர் மற்றும் அவருடைய மகள் தீபா
கருப்பண கவுண்டர் மற்றும் அவருடைய மகள் தீபா

‘நான் கருப்பண கவுண்டரிடம் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அது வட்டியோடு சேர்த்து 10 லட்ச ரூபாய்க்கு மேலாகிவிட்டது. கருப்பண கவுண்டர் அடிக்கடி என்னிடம் கொடுத்த கடனைக் கேட்டு தொந்தரவு செய்துவந்தார். கருப்பண கவுண்டர் மற்றும் அவருடைய குடும்பத்தைத் தீர்த்துவிட்டால், கடன் பிரச்னை ஒழிந்துவிடுமென நினைத்தேன். அதன்படி சபரி என்னும் இளைஞரைவைத்து, கொரோனா சோதனை என்ற பெயரில் மரத்துக்கு வைக்கக்கூடிய சல்பாஸ் மாத்திரையை கருப்பண கவுண்டருக்கும், அவருடைய வீட்டிலிருந்த மூவருக்கும் கொடுக்கவைத்தேன். அவர்களும் கொரோனா டெஸ்ட் என நம்பி அந்த மாத்திரையைச் சாப்பிட்டனர்’ என கல்யாணசுந்தரம் நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். அதையடுத்து கல்யாணசுந்தரம், சபரி (எ) போத்தீஸ்குமார் (21) இருவர் மேலும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism