Published:Updated:

காளையுடன் வீடியோ...!- சோகத்தில் முடிந்த கோவை இளைஞரின் டிக்டாக் மோகம்

கோவையில் காளை மாட்டுடன் குட்டையில் இறங்கி டிக்டாக் செய்த இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டிக்டாக்
டிக்டாக்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இந்த விக்னேஸ்வரன் வீட்டில் காளை வளர்த்து வந்தார். காளை மாட்டை ரேக்ளா ரேஸ்க்கு தயார் செய்வது, காளையை வைத்து டிக் டாக் வீடியோ செய்வது ஆகியவற்றில் விக்னேஸ்வரன் அதிக ஆர்வம் கொண்டவர்.

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

இந்நிலையில், காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோருடன் கடந்த புதன்கிழமை வடுகபாளையத்திலுள்ள குட்டைக்குச் சென்றுள்ளனர்.

டிக் டாக் மோகத்தில் குட்டையில் மாட்டின் மீது ஏறி குதித்து மூவரும் வீடியோ எடுத்து விளையாடியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள், மறுநாளும் அதேபோல் டிக் டாக் வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் மீண்டும் அந்தக் குட்டைக்குச் சென்றவர்கள், மாட்டின் மீது ஏறி குதித்தும், அதனை நீரில் அமிழ்த்தியும் விளையாடியபடி டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர்.

டிக்டாக்
டிக்டாக்

அப்போது மிரண்டு போன காளை, விக்னேஸ்வரனை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை மற்ற மூவரும் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.

இதனால், விக்னேஸ்வரன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்தத் தீயணைப்புத்துறையினர், விக்னேஸ்வரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

செல்ஃ.பி மற்றும் டிக்டாக் மோகத்தால் ஏற்படும் ஆபத்தை உணராமல் இருப்பதால் உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.