பெண்கள் பாதுகாப்பு குறித்த தனது அத்தனை சட்டங்களையும் இந்திய அரசை மறுபரிசீலனை செய்ய வைத்தது டெல்லியில் 2012-ல் நடந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமைக் கொடூரம். தன் நண்பருடன் நள்ளிரவில் பேருந்தில் பயணம் செய்த டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பேருந்து ஓட்டுநர் உட்பட ஆறு பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவருடன் வந்த நண்பரும் அவர்களால் பலமாகத் தாக்கப்பட்டார்.

கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கியெறியப்பட்ட நிர்பயாவின் மரணம் தேசத்தின் மக்களைக் கிளர்ந்தெழுந்து போராடச் செய்தது. நிர்பயாவுக்கு நடந்த கொடூரத்தை அடுத்துதான் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாடாளுமன்றம் முடிவெடுத்தது. விரைவு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எனப் பல நீதிமன்றங்கள் கடந்து 7 ஆண்டுகளுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்து தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. நிர்பயா வழக்கு குறித்த டைம்லைன் பின்வருமாறு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS2012
- டிசம்பர் 16, 2012: மருத்துவ மாணவி நிர்பயா டெல்லியில் பேருந்து ஒன்றில் தன் நண்பருடன் பயணித்துக்கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலுறுப்புகள் அறுத்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- டிசப்பர் 17: கொடூரச் செயலில் ஈடுபட்ட ஆறுபேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்தது.

- டிசம்பர் 18: பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரின் சகோதரர் முகேஷ் மற்றும் வினய், பவன் ஆகியோரைக் குற்றம்சாட்டி டெல்லி காவல்துறை கைது செய்தது.
- டிசம்பர் 20: நடந்த வன்முறை குறித்து நிர்பயாவின் நண்பர் சாட்சியம் அளித்தார்.
- டிச ம்பர் 21: 18 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவர் உட்பட மேலும் இருவரை இந்த விவகாரத்தில் கைது செய்தது டெல்லி காவல்துறை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
- டிச 21 - 22: சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சாட்சியம் அளித்தார் நிர்பயா.
- டிச 23: நிர்பயாவுக்கான போராட்ட வன்முறையில் காயமடைந்த காவலர் தோமர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-டிச 25: பலத்த காயம் காரணமாக தோமர் உயிரிழக்கிறார். நிர்பயாவின் நிலை கவலைக்கிடம் என அறிவிக்கப்படுகிறது.
- டிச 26: நிர்பயாவுக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிறப்பு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
- டிச 29: நீண்டதொரு போராட்டத்துக்குப் பிறகு, நிர்பயா தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை எனத் தனது முதல் தகவல் அறிக்கையைத் திருத்துகிறது போலீஸ்.

2013
- ஜனவரி 2, 2013: பாலியல் குற்ற விசாரணைகளுக்கான விரைவு விசாரணை நீதிமன்றங்களை உருவாக்கியது இந்திய உச்சநீதிமன்றம்.
- ஜன 3: குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஜுவனைல் தவிர்த்த ஐந்து பேர் மீதும் கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் திட்டமிட்ட கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது.
- ஜன 5: நீதிமன்றம் குற்றப்பத்திரிகையைக் கவனத்துக்கு எடுத்துக்கொண்டது.
- ஜன 7: வழக்கு விசாரணை கேமராவில் பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
- ஜன 17: ஐந்து பேர் மீதான விரைவு விசாரணை தொடங்கியது.
- ஜன 28: ஜுவனைல் குற்றவாளி 18 வயதுக்குக் கீழானவர் என்பது நிரூபணமாகிறது.
- பிப் 2: ஐந்து பேர் மீதும் குற்றம்சாட்டுகிறது விரைவு நீதிமன்றம்.
- பிப் 28: சிறார் குற்றவியல் நீதிமன்றமும் ஜூவனைல் குற்றவாளி மீது குற்றம் சாட்டுகிறது.
- மார்ச் 11: முக்கியக் குற்றவாளி ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
- ஜூலை 5: ஜுவனைல் குற்றவாளி மீதான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஜூலை 11-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது.
- ஜூலை 8: வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை முடிந்தது.
- ஜூலை 11: ஜுவனைல் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக விரைவு நீதிமன்றம் அறிவித்தது.
- ஆகஸ்ட் 22: குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணைகளை விரைவு நீதிமன்றம் நடத்தியது.
- ஆக 31: ஜுவனைல் குற்றவாளிக்குச் மூன்று வருடம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சிறைத்தண்டனை விதித்து சிறார் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- செப்டம்பர் 3: விரைவு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
- செப் 10: கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கொலை, உட்பட 13 பிரிவுகளின் கீழ் நான்கு பேரும் குற்றவாளிகள் என விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- செப் 13: நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- செப் 23: விரைவு நீதிமன்றத்தின் மரண தண்டனைப் பரிந்துரை மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் தொடங்கியது.
2014
- ஜன 3, 2014: குற்றம்சாட்டப்பட்டவர்களின் மேல்முறையீட்டின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.
- மார்ச் 13: நான்கு பேருக்கான மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
- மார்ச் 15: குற்றவாளிகள் நான்கு பேரின் மரண தண்டனையை நிறைவேற்றும் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

2017
- பிப்ரவரி 3, 2017: நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதன் மீது புதிதாக விசாரணைத் தொடங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
- மே 5: நிர்பயா கூட்டுப்பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, சுனாமி அதிர்வலைகளை ஏற்படுத்தியாகக் கூறி நான்கு பேரின் மரண தண்டனை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் அமர்வு.
- நவ 8: குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனைச் செய்யக் கோரி மறுமுறையீடு செய்தார்.
- டிச 12: முகேஷின் மறுமுறையீட்டை டெல்லி காவல்துறை எதிர்த்தது.
- டிச 15: முகேஷின் முறையீட்டைத் தொடர்ந்து குற்றவாளிகளில் இருவரான வினய் மற்றும் பவன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவைத் தாக்கல் செய்தனர்.
- ஜூலை 9: மறுபரிசீலனை மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
2019
- பிப், 2019: மரண தண்டனையை விரைந்து நிறைவேற்றக் கோரி நிர்பயாவின் பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு.
- டிச 10, 2019: குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனைச் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
- டிச 13: மறுபரிசீலனை மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார் நிர்பயாவின் தாய்.
- டிச 18: அக்ஷய் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
நான்கு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட்டைக் கோரியது டெல்லி அரசு.

- டிச 19 : குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார், பாலியல் வன்கொடுமைக் கொலை நடந்த சமயம், தான் சிறார் என்கிற அடிப்படையில் தனக்கான தன்டனையை மறுபரிசீலனைச் செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை நிராகரித்தது நீதிமன்றம்.
-ஜனவரி 6, 2020: வழக்கின் ஒரே சாட்சியத்தின் மீதான முதல் தகவல் அறிக்கையைக் கேட்டு பவன் குமாரின் தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டது.
- ஜன 7: 22 ஜனவரி 2020 அன்று குற்றவாளிகள் நான்கு பேரையும் காலை 7 மணியளவில் திகார் சிறையில் தூக்கிலிடக் கோரி உயர் நீதிமன்றம் நிர்பயா கூட்டுப்பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கை முடித்து வைத்தது.