Published:Updated:

திருப்பத்தூர்: சமூக விரோதிகளின் கூடாரமான தாய்மார்கள் பாலூட்டும் அறை! - நடவடிக்கை எடுக்குமா அரசு?

பாலூட்டும் அறை

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை சமூக விரோதிகளின் பிடியில் இருக்கிறது. அதை மீட்டு தாய்மார்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

திருப்பத்தூர்: சமூக விரோதிகளின் கூடாரமான தாய்மார்கள் பாலூட்டும் அறை! - நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை சமூக விரோதிகளின் பிடியில் இருக்கிறது. அதை மீட்டு தாய்மார்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

Published:Updated:
பாலூட்டும் அறை

பயணம் செய்யும், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட வசதியாக, தமிழகம் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையங்களில் கடந்த 2015-ம் ஆண்டு 352 தாய்ப்பால் கொடுக்கும் தனி அறைகள் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டன.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை முறையான பராமரிப்பின்றி, சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறிக்கிடக்கிறது.

தாய்மார்கள் பாலூட்டும் அறை
தாய்மார்கள் பாலூட்டும் அறை

அதனால், பயணம் செய்யும் பாலூட்டும் தாய்மார்கள் அந்த அறையைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த அறையின் மேல் தளத்தில் நகராட்சிக்குச் சொந்தமான சில வாடகைக் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளை யாரும் வாடகைக்கு எடுக்காததால், சமூக விரோதிகள் சிலர் அந்த அறைகளையும் மது அருந்தப் பயன்படுத்துகின்றனர். குடித்துவிட்டு போதையில் இருக்கும் அந்த ஆசாமிகள் அங்கேயே சிறுநீர், மலம் கழித்து அசுத்தம் செய்துவிடுவதால், அங்கு கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக நம்மிடம் சிலர் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடைகள்
கடைகள்

அதையடுத்து, நாம் பேருந்து நிலைய வளாகத்துக்கு விரைந்து அங்கு கடை நடத்திவருபவர்களிடம் விசாரித்தோம். ``பேருந்து நிலையத்துல இருக்குற தாய்மார்கள் பாலூட்டும் அறை ரொம்ப நாளா பராமரிப்பில்லாம இருக்கு. அதுமட்டுமில்லாம இந்தப் பகுதியில இருக்குற சிலர் பெண்கள் பாலூட்டும் அறையில் ராத்திரி, பகலா உட்கார்ந்து குடிச்சுட்டு இருக்குறாங்க. அதனால, தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட இந்த அறையை பயன்படுத்தவே தயங்குறாங்க. இதைப் பத்தி கேட்கப்போனா போதையில தகராறு செய்யுறாங்க. அந்த அறை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்குறதால, தாய்மார்கள் குழந்தைகளை கையிலவெச்சுக்கிட்டு எங்ககிட்ட, `ஒரு பத்து நிமிஷம் குழந்தைக்குப் பால் கொடுக்க இடம் கொடுங்க'னு கேக்குறாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேமாதிரி, மேல்தளத்துல இருக்குற கடைகளை யாரும் வாடகை எடுக்காததால, கடைகளோட ஷட்டர் எல்லாம் அப்படியே திறந்து கிடக்கு. அதனால, அங்கேயும் எப்ப பார்த்தாலும் பசங்க கும்பல் கும்பலா உட்கார்ந்து குடிச்சுட்டு, சிகரெட் பிடிச்சுக்கிட்டு ஒரே அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. மூடிக் கிடக்குற கடைகள்ல போதை ஆசாமிங்க சிறுநீர் கழிக்குறது, மலம் கழிக்குறதுனு நாசம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால, அந்த இடத்துல கடுமையான சுகாதாரச் சீர்கேடு நிலவுது. இது சம்பந்தமா அதிகாரிங்ககிட்ட எத்தனையோ முறை புகார் தெரிவிச்சிட்டோம். ஆனா, யாரும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. காலியா இருக்குற கடைகளைப் பூட்டி வெச்சாவாது நல்லா இருக்கும். அதிகாரிங்க அதையும் செய்யாம, தாய்மார்கள் பாலூட்டும் அறையையும் போதை ஆசாமிங்க பிடியிலிருந்து மீட்டு பெண்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவராம இருக்காங்க" என்று குமுறினார்கள்.

கடைகள்
கடைகள்

இது தொடர்பாக திருப்பத்தூர் நகர மன்றத் தலைவர் சங்கீதாவிடம் கேட்டபோது, ``பேருந்து நிலையத்தில் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம். தற்போது வரி வசூலில் கவனம் செலுத்திவருவதால், இன்னும் மூன்று நாள்களுக்குள் சரிசெய்யப்பட்டு, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தாய்மார்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி முறையாகப் பராமரிக்கப்படும். அதேபோல, மேலே இருக்கும் காலியான வாடகைக் கடைகளும் பூட்டப்படும்" என்று உறுதியளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism