Published:Updated:

இன்ஷூரன்ஸ் தொகை பெற காரில் எரிந்து இறந்ததாக நாடகம்; விசாரணையில் வெளிவந்த ஆன்லைன் சூதாட்ட பின்னணி!

எரிந்த கார்

அந்த காரில் உடல் கருகி இருந்தது. இறந்தவர் தர்மாவாக இருக்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்தனர். தர்மாவின் மனைவியும், தம்பியும் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்துள்ளனர்.

இன்ஷூரன்ஸ் தொகை பெற காரில் எரிந்து இறந்ததாக நாடகம்; விசாரணையில் வெளிவந்த ஆன்லைன் சூதாட்ட பின்னணி!

அந்த காரில் உடல் கருகி இருந்தது. இறந்தவர் தர்மாவாக இருக்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்தனர். தர்மாவின் மனைவியும், தம்பியும் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்துள்ளனர்.

Published:Updated:
எரிந்த கார்

ஹைதராபாத் மேடக் மாவட்டம், வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்ம நாயக் என்பவர் மாநில செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக அரசு வேலையில் பணிபுரிந்து வருகிறார். ஜனவரி 7-ம் தேதி கார் ஓட்டுநருடன் தன்னுடைய கிராமத்துக்குச் சென்றவர், 8-ம் தேதி தன் மனைவியிடம் ஹைதராபாதந்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

எரிந்த கார்
எரிந்த கார்

ஆனால், ஜனவரி 9-ம் தேதி கிராமத்தின் அருகே ஒரு கார் தீப்பிடித்து எரிந்திருந்தது. காவல் துறைக்கு வந்த தகவலின் பேரில், அந்த இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர். அந்த காரில் உடல் கருகி இருந்தது. இறந்தவர் தர்மாவாக இருக்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்தனர். தர்மாவின் மனைவியும் தம்பியும் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்துள்ளனர்.

காவல் துறையினருக்குச் சந்தேகம் நிலவியதால், தொடர்ந்து தர்மாவின் குடும்பத்தைக் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். தர்மா மனைவியின் போக்கைக் கண்காணித்து அவரது தொலைப்பேசி அழைப்புகளை ஆராய்ந்தனர். ஜனவரி 12-ம் தேதி தர்மா அவரின் மனைவியை அழைத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழைப் பெற்று இன்ஷூரன்ஸ் தொகையை வாங்கச் சொல்லி இருக்கிறார்.

இதைக் கண்டறிந்த காவல்துறை அதிகாரிகள் கையும் களவுமாக அவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். தர்மாவின் தம்பியும் மனைவியும் தங்களது திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். 6 மாதத்துக்கு முன்பே இந்தத் திட்டத்தை வகுத்ததாகவும், கார் விபத்தை செட் அப் செய்துவிட்டு தர்மா புனேவுக்கு சென்றதாகவும் கூறியுள்ளனர்.

சூதாட்டம்
சூதாட்டம்

இது குறித்து அந்த மாவட்ட எஸ்.பி  ரோகிணி பிரியதர்ஷினி கூறுகையில், ``குற்றம் சாட்டப்பட்ட தர்மாவைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். தர்மா ஆன்லைன் சூதாட்டத்தில் 1.25 கோடி ரூபாயை இழந்த பின்பு விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கான சதித்திட்டம் குறித்து கனவு கண்டுள்ளார். 

பெருகிய கடன் குழப்பத்திலிருந்து எப்படி மீள்வது எனக் கணவனும் மனைவிக்குமிடையே சண்டை நடந்திருக்கிறது. அந்தக் குழப்பத்தின் விளைவாகவே இந்த ஏமாற்றுத் திட்டம் வெளிவந்துள்ளது. இந்தக் குற்றத்தில் யார் யாருக்கெல்லாம் பங்குண்டு என்பது விசாரணைக்குப் பின்பு அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலரும் கடன் நெருக்கடியில் சிக்கிக் கொள்வதுண்டு. ஆனால், இந்த வழக்கில் சற்று முன்னோக்கிச் சென்று ஏமாற்று வேலையை கையில் எடுத்துள்ளனர்.

எனவே, மக்கள் விரைவாக பணம் சம்பாதிக்கும் தவறான வழியில் பயணிக்காமல், தெளிவாக செயல்பட்டு அறத்தோடு வாழ்வது சிறந்தது.