Published:Updated:

சாதிப் பெயரைச் சொல்லி பழங்குடியின மாணவனைத் தீயில் தள்ளிய சக மாணவர்கள்? - திண்டிவனத்தில் அதிர்ச்சி!

திண்டிவனம்

6-ம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவனை, சக மாணவர்கள் சிலர் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, தீயில் தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதிப் பெயரைச் சொல்லி பழங்குடியின மாணவனைத் தீயில் தள்ளிய சக மாணவர்கள்? - திண்டிவனத்தில் அதிர்ச்சி!

6-ம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவனை, சக மாணவர்கள் சிலர் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, தீயில் தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது காட்டுச்சிவிரி. இந்த கிராமத்தில் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த கன்னியப்பன், தன் குடும்பத்தாருடன் வசித்துவருகிறார். இவருடைய 11 வயது மகன் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தினேஷ் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்கள் சிலர் அந்தச் சிறுவனைச் சாதிப் பெயர் சொல்லி கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுவன் தினேஷ்
பாதிக்கப்பட்ட சிறுவன் தினேஷ்

இது குறித்து தினேஷ், தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு ஆதங்கப்பட்ட தினேஷின் தந்தை கன்னியப்பன், பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று மாலை (09.05.2022) தினேஷ் தன் பாட்டி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த மூன்று பள்ளிச் சிறுவர்கள், தினேஷை சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, அங்கு எரிந்துகொண்டிருந்த தீயில் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தீக்காயத்துக்குள்ளான தினேஷ், அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்கு கீழே தேங்கியிருந்த தண்ணீரில் உடலை நனைத்து தன்னைக் காத்துக்கொண்டார். அதன் பின்னர் கேலி செய்ததாகக் கூறப்படும் மூன்று மாணவர்களில், இரு மாணவர்கள் இணைந்து தினேஷை அவரது வீட்டுக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

மகனின் உடலில் இருக்கும் தீக்காயங்களைக் கண்டு அதிர்ச்சியுற்ற தினேஷின் தாயார், அருகிலிருக்கும் மண்ணம் பூண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார். மகனின் இந்த நிலையைக் கண்ட கன்னியப்பன் அதிர்ச்சியுற்று, தீக்காயம் அதிகமாக இருப்பதைக் கண்டு, மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுவன் பேசும் பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

சாதிப் பெயரைச் சொல்லி பழங்குடியின மாணவனைத் தீயில் தள்ளிய சக மாணவர்கள்? - திண்டிவனத்தில் அதிர்ச்சி!

மேலும், தினேஷின் தந்தை வெள்ளிமேடு காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தினேஷிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து 324 IPC, 3(1) (r)& (s) SC/ST act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டியல் சமூக மாணவன் ஒருவனை மற்றொரு பிரிவைச் சேர்ந்த சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, நெருப்பில் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism