Published:Updated:

` புத்தாண்டு கொண்டாட அழைத்தேன்...!' -திருச்சி மாணவிக்குக் காதலனால் நேர்ந்த கொடூரம்

மாணவி
மாணவி

போலீஸாரின் தொடர் விசாரணையில், திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் அடுத்த இனாம் மாத்தூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கொத்தனார் மதிக்குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அழகாபுரி அடுத்துள்ள கவுத்தநாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில் கடந்த 2-ம்தேதி காலை இளம்பெண் ஒருவர், முகத்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த மணிகண்டம் போலீஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, மணிகண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன், உதவி ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீஸார் விசாணை நடத்தினர்.

சடலமாக மாணவி
சடலமாக மாணவி

போலீஸாரின் விசாரணையில், அந்தப் பெண் திருச்சி மாவட்டம்,, மணிகண்டம் அடுத்த வடக்கு நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி என்பது தெரியவந்தது.

மாணவி காணாமல் போனது குறித்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

மாணவி சடலமாக இருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த மாணவியின் உறவினர்கள், `` மாணவி காணாமல் போனதும், அவரைப் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தோம். கிடைக்காத நிலையில் மறுநாள், மணிகண்டம் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூரியாவிடம் புகார் கொடுத்தோம். தேர்தல் பணிக்காக போலீஸார் வெளியில் இருப்பதால் பிறகு விசாரிப்பதாகக் கூறினார்கள். இதையடுத்து, போலீஸரை நம்பிப் பலனில்லை என நினைத்து மாணவியைத் தேட ஆரம்பித்தோம். பல்வேறு பகுதிகளில் தேடி அலைந்தோம். இந்நிலையில், கவுத்த நாயக்கன்பட்டி வனப்பகுதியில் மாணவியின் செருப்பு கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தேடியபோது, அதே வனப்பகுதியில் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டநிலையில், முகத்தில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார்” எனக் கண்ணீருடன் விவரித்தனர்.

மதிக்குமார்
மதிக்குமார்

தொடர்ந்து, சம்பவ இடத்தில் திருச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக் நேரில் விசாரணை நடத்தினார். மாணவியின் புத்தகப் பையில் காதல் கடிதமும் சில தொலைபேசி எண்களும் இருந்தன. அந்தச் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், மாணவி தினமும் குறிப்பிட்ட ஒரு எண்ணுக்குப் பேசியது தெரியவந்தது.

போலீஸாரின் தொடர் விசாரணையில், திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் அடுத்த இனாம் மாத்தூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கொத்தனார் மதிக்குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையில் பேசிய மதிக்குமார், ``எனது வேலை விஷயமாக நாகமங்கலம் அருகே உள்ள குன்னத்தூருக்கு அடிக்கடி போய் வருவேன். அப்போது அந்தவழியாக பள்ளிக்குச் சென்றுவந்த மாணவியுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக நாங்கள் காதலித்து வந்தோம். அவளுடன் தனிமையில் இருக்கப் பலமுறை முயற்சி செய்தேன். ஆனால், அதற்கு அவள் சம்மதிக்கவில்லை.

இந்தநிலையில், வேறொரு நபருடன் அவள் பழகி வருவது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த நான், அவரைக் கண்டித்தேன். நான் அப்படிப்பட்டவள் இல்லை எனக் கூறினாள்.

மதிக்குமார்
மதிக்குமார்

இந்நிலையில், புத்தாண்டையொட்டி அவளுக்கு போன் செய்து, “உனக்காகப் புத்தாண்டுப் பரிசு வாங்கி வைத்துள்ளேன். உன்னைப் பார்க்க வேண்டும் வா” என அழைத்தேன். நான் சொன்னதை நம்பி, வீட்டிலிருந்து வந்தாள்.

அதைத்தொடர்ந்து, எனது பைக்கில் அவளை அழைத்துக்கொண்டு, நாகமங்கலம் அடுத்த மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள கவுத்த நாயக்கன்பட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றேன். அங்கு வைத்து கேக் வெட்டிக் கொண்டாடினோம். இதன்பிறகு வீட்டுக்குப் போக வேண்டும் என அடம்பிடித்தாள்.

`இருமல் தொல்லைக்காக நரம்பு ஊசி போட்டார்!' -பெரம்பலூர் போலி மருத்துவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இதில் ஏற்பட்ட தகராறில் அவள் முகத்தில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வன்கொடுமை செய்து கொலை செய்தேன்" எனக் கூறியிருக்கிறார்.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

அதேநேரம், மதிக்குமாருடன் மாணவி சென்றபோது, வேறு பைக்குகளில் மூன்று இளைஞர்கள் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களையும் பிடித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பன்றி வியாபாரப் போட்டி... அடுத்தடுத்த கொலைகள்... நடுங்கும் மலைக்கோயில் மாநகரம்! #க்ரைம்ஸ்டோரி
அடுத்த கட்டுரைக்கு