Published:Updated:

`பந்தயம் கட்டினான், பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்தேன்!' - நண்பனால் சிக்கிய போதை வாலிபர்

பந்தயம் கட்டி இளம் பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் புதுச்சேரி இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Accuste
Accuste ( A.Kuruzthanam )

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் சோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 23. புதுச்சேரியில் வசித்துவரும் இவர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ம் தேதி இரவு 8 மணியளவில் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

Puducherry Police
Puducherry Police
A.Kuruzthanam

அப்போது அவருக்குத் தெரியாமல் இரு இளைஞர்கள் பைக்கில் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். ஒருகட்டத்தில் பைக்கிலிருந்து அவசரமாக இறங்கிய ஒரு இளைஞர் சோனாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்த மற்றோர் இளைஞருடன் தப்பித்து ஓடிவிட்டார்.

இதில் அதிர்ச்சியடைந்த சோனா உடனே பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டுமென்று காவல்துறை கண்காணிப்பாளர் (கிழக்கு) காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். உடனே விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பெண் அதிகாரியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அந்த இளைஞர் மொட்டைத்தோப்பைச் சேர்ந்த ரிஷி (19) மற்றும் அவரது நண்பர் அரவிந்த் (17) என்பதும் தெரியவந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் ரிஷியை வளைத்துப் பிடித்துக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Accuste Arrest
Accuste Arrest
A.Kuruzthanam

``நானும் எனது நண்பன் அரவிந்தனும் மது குடித்துவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா என்று என் நண்பன் அரவிந்தன் என்னிடம் பந்தயம் கட்டினான். அதனால் அவரைப் பின் தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு தப்பித்துவிட்டோம். இதைப் பற்றி அவர் யாரிடமும் சொல்லமாட்டார் என்று நினைத்தோம். ஆனால் அவர் போலீஸில் சொன்னதால் நாங்கள் மாட்டிக் கொண்டோம்” என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் ரிஷி.

12 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறைக்குப் பாராட்டுகள் குவிந்துவரும் அதே நேரத்தில், காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்த அந்தப் பெண் அதிகாரிக்கும் பாராட்டுகள் குவிகின்றன.