Published:Updated:

அருப்புக்கோட்டை: குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி... சகோதரர்கள் மரணம் குறித்து விசாரணை!

பலியான சிறுவர்கள்

நீர்நிலைக்குக் குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அருப்புக்கோட்டை: குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி... சகோதரர்கள் மரணம் குறித்து விசாரணை!

நீர்நிலைக்குக் குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பலியான சிறுவர்கள்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 32). இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி சந்தியம்மாள். இந்தத் தம்பதியருக்கு சித்தார்த் (8), சந்திரமணி (7) என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சந்திரமணி அருகிலுள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பும், சித்தார்த் நான்காம் வகுப்பும் படித்துவந்தனர். இந்த நிலையில், பள்ளி முடிந்ததும் சகோதரர்களான சந்திரமணியும் சித்தார்த்தும் அருகிலுள்ள பாப்பாவி நீர்நிலையில் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வெகுநேரமாகியும் குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது.

சிறுவன்
சிறுவன்

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர், பிள்ளைகளைப் பல இடங்களில் தேடியிருக்கின்றனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவர்கள் கிடைக்காததால், சந்தேகத்தின்பேரில் நீர்நிலையில் தேடிப்பார்த்திருக்கின்றனர். அப்போது நீர்நிலையின் ஆழமான பகுதியில் சிறுவன் ஒருவன் சடலமாக மிதப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்துவந்த மீட்புப் படையினர் நீர்நிலைக்குள் இறங்கி நீரில் மிதந்த சிறுவனின் உடலை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். அப்போது, சடலமாக மிதந்தது சிறுவன் சித்தார்த் என்பது தெரியவந்தது. ஆனால், உடன்வந்த சந்திரமணி உடல் கிடைக்காததால், அவரின் நிலை என்னவானது என தொடர்ந்து பதற்றம் நீடித்தது. இதனால் மீண்டும் அவரைத் தேடி மீட்புப் பணியில் இறங்கினர். சிறிது நேரத்தில், சித்தார்த் உடல் கிடைத்த இடத்துக்குச் சற்று தொலைவிலேயே, நீருக்குள் புதைந்திருந்த நிலையில் சிறுவனின் கால் மட்டும் வெளியே தெரிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அந்தச் சிறுவன் சந்திரமணி என்பது உறுதிசெய்யப்பட்டது.

சிறுவன் பலி
சிறுவன் பலி

இதையடுத்து, சிறுவர்களின் உடல், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். நீர்நிலைக்குக் குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.