Published:Updated:

நாய் மீது பைக் மோதிய தகராறு; அடித்தே கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்! - திருச்சியை அதிர வைத்த கொலைகள்

சின்னச் சின்ன தகராறுகள் கொலையில் முடிவுதான் விபரீதம். அந்த வகையில் திருச்சியில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்திருப்பது பதற வைக்கிறது.

“ஜிம்” மணிகண்டன்
“ஜிம்” மணிகண்டன்

கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி இரவு திருச்சி, உறையூர், காசிசெட்டித் தெருவைச் சேர்ந்த சபரி என்பவர், உறையூர் 80 அடி சாலையில் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிக் கொன்றது. ரத்தவெள்ளத்தில் சரிந்த சபரியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

`எதற்காக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது?!' - வெடிக்கும் வடமாநில இளைஞர்கள் பணி நியமன விவகாரம்

இந்த வழக்கில், உறையூர் செங்குளத்தான் கோயில் தெருவைச் சேர்ந்த ராணுவ வீரரான சந்தோஷ் மற்றும் அவரது தம்பி சரவணன் மற்றும் கூட்டாளிகளான பிரவீன்குமார், சரத்குமார் உள்ளிட்டோர் கொலை செய்தது தெரியவந்தது. சின்ன வயதில் ஏற்பட்ட கிரிக்கெட் தகராறு, குடும்பப் பகையாகி பழிதீர்க்கும் வகையில் மாறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், அதே உறையூர் பகுதியில் முதல் மரியாதை யாருக்கு என்ற போட்டியில் மீண்டும் கொலை நடந்துள்ளது.

திருச்சி, உறையூர் மேலமின்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். சிறுவயதிலிருந்தே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைத்த இவர், உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வது வழக்கம். அப்படிப் போனவர், உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதுபார்க்க கற்றுக்கொண்டு, நவீன உடற்பயிற்சி கருவிகள் பொருத்தும் பணியையும் செய்துவருகிறார். இதனால் அப்பகுதியில் உள்ள அவரது நண்பர்கள் `ஜிம்' மணி என அழைக்கிறார்கள்.

உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்து இருந்த `ஜிம்' மணி அப்பகுதியில் சின்னச் சின்ன பஞ்சாயத்துகளில் ஈடுபடத் தொடங்கினார். அதன்படி அப்பகுதியில் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது நண்பன்`சடை' மணி என்பவருக்கும், `ஜிம்' மணிகண்டன் வீட்டின் அருகில் குடியிருக்கும் செந்தில்குமாருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து தெரிந்த `ஜிம்' மணிகண்டன், செந்தில்குமாரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

 “ஜிம்” மணிகண்டன்
“ஜிம்” மணிகண்டன்

இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் மணிகண்டன் செந்தில்குமாரை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து செந்தில்குமாருக்கு ஆதரவாக அவரது மைத்துனர் புகழேந்தி சேர்ந்து இருவரும் `ஜிம்' மணிகண்டனை அரிவாளால் தாக்கினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிம் மணிகண்டன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த மணிகண்டன் வீட்டின் அருகே அமைச்சர் வளர்மதியின் வீடும் உள்ளதால், `அமைச்சர் வீடு' அருகே கொலை எனத் தகவல் பரவியது. இதனால் கூடுதல் பரபரப்பு போடப்பட்டது. தகவலறிந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில், ``செந்தில்குமாருக்கும் மணிகண்டனுக்கும் ஆரம்பத்திலிருந்தே பிரச்னை இருந்தும். அவர்கள் வசிக்கும் தெருவில், யார் பெரிய ஆள் என்கிற போட்டி, முதல் மரியாதை பிரச்னைகள் இருந்ததாகவும் தெரியவந்தது. இந்நிலையில் ஜிம் மணிகண்டன், சடை மணிக்கு ஆதரவாக நிற்கவே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, அதுவே கொலை நடக்க காரணமானது” எனத் தெரியவந்தது.

veeramuthu
veeramuthu

இந்நிலையில் ஜிம் மணிகண்டன் தாக்கியதில் காயமடைந்த செந்தில்குமாரை கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் நாய் மீது பைக் மோதிய தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

`43 வீடியோக்கள், 20 பக்க புகார், கொலை மிரட்டல்..!’ - பாலியல் வழக்கில் கைதான சுவாமி சின்மயானந்த்

திருச்சி திருவெரும்பூர் அடுத்துள்ளது நவல்பட்டு பூலாங்குடி காலனி. இப்பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் நேற்று முன்தினம் தனது நாயுடன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் குபேரன் ஆகியோர் வந்த இருசக்கர வாகனம், அந்த நாய் மீது மோதியது. இதனால் ஆத்திரமடைந்த வீரமுத்து, மாரியப்பன் மற்றும் குபேந்திரன் ஆகியோரையும் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த இருவரும் அங்கிருந்து வீட்டுக்குச் சென்று தகவல்கூறி ஆதரவாளர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்த 10பேர் கொண்ட கும்பல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வீரமுத்துவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வீரமுத்து ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அதையடுத்து அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வீரமுத்து மரணமடைந்தார்.

`திருச்சி பெண்.. திருப்பூரில் காதல்.. திருவண்ணாமலையில் கொலை..!’ - அதிரவைத்த காதலன்

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி நவல்பட்டு காவல்துறையினர், மாரியப்பன் மற்றும் குபேந்திரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள். ஒரேநாளில் நடந்த 2 கொலை சம்பவங்களால் திருச்சி மாநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.