Published:Updated:

தூக்கில் தொங்கிய மாணவர்; ஆற்றில் மிதந்த மாணவி! -பிரேத பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் போலீஸார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி ஆற்றின் கரையோரம் ஒரே பள்ளியில் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த மாணவரும் மாணவியும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த குமரன் என்பவரின் மகள் ரேஷ்மா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன). ரேஷ்மா அதே ஊரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த நவம்பர் 20-ம்தேதி மாலை சுமார் 7 மணியளவில் கடைக்குச் சென்றுவருவதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற ரேஷ்மா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரின் பெற்றோர் கச்சிராயபாளையம் போலீஸில் 21-ம் தேதி புகார் அளித்தனர்.

மாணவர்களின் சடலம்
மாணவர்களின் சடலம்

அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மாயமான ரேஷ்மாவைத் தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று கள்ளக்குறிச்சியை அடுத்த சோமண்டார்குடி பகுதியில் கோமுகி ஆற்றின் கரையோரமாக இளம்பெண்ணின் சடலமும், அதற்கு அருகில் வேப்பமரத்தில் இளைஞர் ஒருவர் சடலமாகத் தூக்கில் தொங்குவதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆற்றில் சடலமாக மிதந்த உடல் மாயமான மாணவி ரேஷ்மா என்பது தெரியவந்தது. அதேபோல வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியவர் குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் சுரேஷ்குமார் (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன) என்பதும் தெரியவந்தது.

சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை

மேலும் இவர்கள் இருவரும் அந்தப் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்ததும் தெரியவந்தது. அதையடுத்து இரண்டு சடலங்களையும் மீட்ட போலீஸார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இறந்துபோன மாணவியின் தாய், இறந்துபோன மாணவனின் தாத்தா ஆகியோரிடம் புகாரைப் பெற்று கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதற்கட்ட விசாரணை குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்துவந்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகம் என்பதால் தங்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்களா என்ற குழப்பத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

சீர்காழி: கொலையா... தற்கொலையா?; தூக்கில் தொங்கிய சடலம்! - 10 மணி நேரம் நடந்த போராட்டம்

உயிரிழந்த மாணவர் சுரேஷ்குமார் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது சக மாணவர் ஒருவரிடம் காதல் விவகாரத்தால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் இந்தச் சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு