Published:Updated:

வேலைக்குச் சம்பளம் கேட்ட பட்டியலின சிறுவன்; கொடூரமாகத் தாக்கிய மாற்றுச் சமூகத்தினர் - என்ன நடந்தது?

குற்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டியலின சிறுவனை மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி... கால்களை நக்கவைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட சிறுவன் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் கணவனை இழந்த தன் தாய் மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் சகோதரியுடன் வசித்து வந்திருக்கிறார். சமீபத்தில் இவருடைய தாயும், சகோதரியும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய வயலில் வேலை பார்த்ததாகத் தெரிகிறது. அதற்கு, அவர்களிடம் இந்த சிறுவன் சம்பளம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கோபமடைந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சிறுவனைத் தாக்கி சம்பளம் கேட்டதற்குத் தண்டனையாக, அந்த வயல் உரிமையாளரின் கால்களை நக்கி விடுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுவன் தரையில் அமர்ந்து அங்கிருப்பவர்களைப் பார்த்து நடுங்கிக்கொண்டே பைக்கில் இருக்கும் நபர் ஒருவரின் கால்களை அச்சப்பட்டு நக்கி விடுகிறான். அதைத் தொடர்ந்து, `இனிமேல் இப்படிச் செய்வாயா!' எனக் கூட்டத்திலிருப்பவர்கள் கேட்டுச் சிரிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில உயர் காவல் அதிகாரி அசோக் சிங் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஏப்ரல் 10-ம் தேதி நடந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism