Published:Updated:

உ.பி: அரசாங்க நிதியுதவிக்காகச் சொந்த சகோதரியை மணந்த நபர் - வழக்கு பதிவு செய்த போலீஸ்

சகோதரியைத் திருமணம் செய்த நபர்!
News
சகோதரியைத் திருமணம் செய்த நபர்!

ஒரு தாய் பிள்ளைகளான இருவரும், திருமணக்கோலத்திலிருந்தது அந்த ஊர்மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூகநலத்துறை மூலம் நடத்தப்படும் கூட்டுத்திருமணங்களில் பங்கேற்று, திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசு சார்பில் ரூ.35,000 (ஒரு ஜோடிக்கு) தரப்படுகிறது. இந்த தொகை போக, திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு வீட்டு உபயோகப் பொருள்களையும் அரசாங்கம் இலவச பரிசாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்படி 20,000 ரூபாயை மணப்பெண்ணின் வங்கிக் கணக்கிலும், 10,000 மதிப்புள்ள பரிசுப்பொருள்களும், இன்னும் பல சலுகைகளும் கூட்டுத் திருமணத்தில் பங்கேற்கும் ஜோடிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருமணம்
திருமணம்

அந்த வகையில், ஆக்ராவை அடுத்த பிரோசாபாத்திலிருக்கும் டுண்ட்லா பகுதியில், தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் கோலாகலமாக 52 ஜோடிகளுக்குக் கூட்டுத் திருமணம் அண்மையில் நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு புகைப்படம் மட்டும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அந்தக் கூட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ஜோடிகளில் மணமக்கள் கோலத்திலிருந்த சகோதர - சகோதரி தான். ஒரு தாய் பிள்ளைகளான இருவரும், திருமணக்கோலத்திலிருந்தது அந்த ஊர்மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களின் புகைப்படமும் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு, சர்ச்சையைக் கிளப்பியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதையடுத்து, இந்த விவகாரம் அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்த பகுதியின் தொகுதி மேம்பாட்டு அலுவலர் நரேஷ் குமார், ``அரசின் கூட்டுத் திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்டவர்களில், ஒரு ஜோடி சொந்த சகோதர - சகோதரி என்பது தெரியவந்திருக்கிறது. அரசின் உதவித் தொகைக்காகவும், பொருள்களுக்காகவும் அவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். தவறான தகவல்களை அளித்து அரசை ஏமாற்றிய இருவர் மீதும் போலீஸார் மூலம் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சகோதரியைத் திருமணம் செய்த நபர்!
சகோதரியைத் திருமணம் செய்த நபர்!

முன்னதாக உ.பி-யில் இதேபோல, கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பெண் தன் கணவர் உயிருடன் இருக்கும்போதே, சலுகைக்காக வேறொருவரை மணந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.