Published:Updated:

வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்த தாய்; துப்பாக்கியால் சுட்ட 16 வயது மகன்... உ.பி-யில் அதிர்ச்சி

துப்பாக்கி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் போனில் வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்த தன் தாயை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்த தாய்; துப்பாக்கியால் சுட்ட 16 வயது மகன்... உ.பி-யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் போனில் வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்த தன் தாயை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
துப்பாக்கி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 16 வயது சிறுவன் போனில் வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு நாள் அவருடைய தாய் அடிக்கடி போனில் கேம் விளையாடக் கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் தாயைக் கொலைசெய்திருக்கிறார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ``அந்தச் சிறுவன் போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கு அடிமையானதால், அடிக்கடி போனில் வீடியோ கேம் விளையாடி வந்தான். தாய் இதைக் கண்டித்ததால், தன் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியைக்கொண்டு தாயின் தலையில் சுட்டிருக்கிறார். அவரின் தந்தை ஒரு ராணுவ வீரர்.

கொலை
கொலை

சிறிது நேரத்துக்குப் பிறகு அவரின் தாய் இறந்துவிட்டார். அந்தச் சிறுவன் தாயின் உடலை இரண்டு நாள்களாக வீட்டில் மறைத்துவைத்திருக்கிறார். இவருக்கு 9 வயதில் ஒரு தங்கையும் இருக்கிறார். இந்தச் சம்பவம் பற்றி யாரிடமும் கூறக் கூடாது என தங்கையை மிரட்டியிருக்கிறார். தாயின் உடலில் ஏற்பட்ட துர்நாற்றத்தை மறைக்க ரூம் ப்ரெஷ்னரை (ஸ்பிரே) பயன்படுத்தியிருக்கிறார்.

சிறுவன் ஆரம்பத்தில் வீட்டு வேலைக்காக வந்த எலெக்ட்ரீஷியன், தாயைச் சுட்டுக் கொன்றதாக ஒரு பொய்க் கதையை உருவாக்கி, காவல்துறையிடமும், தந்தையிடமும் கூறியிருக்கிறார். அதன் பிறகு போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது’’ என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism