Published:Updated:

5 வீடுகளில் சிக்கிய 7 முக்கிய ஆவணங்கள்! - கோவையில் நீடித்த என்.ஐ.ஏ சோதனை

குருபிரசாத்

கோவையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் உமர் பரூக், சனாபர் அலி, சமேஷா முபீன், முகமது யாஷீர், சதாம் உசேன் உள்ளிட்ட ஐந்து நபர்களின் வீட்டில் தேசியப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சமூக வலைதளத்தில் தொடர்புடையதாகக் கூறி, ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் இல்லங்களில் சோதனைசெய்த அதிகாரிகள், அவர்களை கோவை ரேஸ்கோர்ஸில் என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து விசாரணைசெய்தனர்.

இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் வசித்துவரும் 4 பேரின் வீடுகளில் சுமார் ஐந்து மணி நேரத்தும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐந்து பேரின் வீடுகளில் இருந்து, ஏழு அரபு மொழி புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், ஏழு செல்போன்கள், நான்கு சிம்கார்டுகள், ஒரு லேப்டாப், ஒரு மெமரி கார்டு, சி.டி, டி.வி.டி-க்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

மேலும், இந்த ஐந்து பேரையும் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஐந்து இளைஞர்களையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அதில், சதாம் உசேன், முகமது யாசிர் ஆகியோரை மட்டும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.

குறிப்பாக, லஷ்கர் - இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள், இலங்கை வழியாக கோவைக்கு வந்திருப்பதாகக் கூறி, கடந்த வாரம் கோவையில் பல்வேறு இடங்களில் பலத்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகளின் தீவிர விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.