Published:Updated:

வேலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை! - குண்டர் சட்டத்தில் தொழிலாளி சிறையிலடைப்பு

கைதுசெய்யப்பட்ட பாபுல்
கைதுசெய்யப்பட்ட பாபுல்

வீடு புகுந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கட்டடத் தொழிலாளிமீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர், சைதாப்பேட்டை பி.டி.சி ரோட்டிலுள்ள பசவதன் குளம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் காலிக் அகமது என்கிற பாபுல். வயது 40. கட்டட வேலை செய்துவந்த இவர், சமீபத்தில் ஒரு நாள் இரவு ஒரு வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை நோட்டம் பார்த்திருக்கிறார். அந்தச் சிறுமியின் வீட்டுக் கதவைத் தட்டி குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார் பாபுல். சிறுமியும் தண்ணீர் எடுத்து வருவதற்காகச் சமையல் அறைக்குச் சென்றபோது, பின்தொடர்ந்து உள்ளே சென்ற பாபுல், சிறுமியிடம் அத்துமீற முயன்றிருக்கிறார். சிறுமி கூச்சலிட்டதால், அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Girl - Representational Image
Girl - Representational Image

`இது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது; அப்படிச் சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டிவிட்டு பாபுல் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இது குறித்து, சிறுமி கொடுத்த புகாரின்பேரில், வேலூர் அனைத்து மகளிர் போலீஸார் `போக்சோ’ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து பாபுலைக் கைதுசெய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவரின் காவலை குண்டர் சட்டத்தின்கீழ் நீட்டிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி செல்வகுமார் பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று, பாபுலை குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். சிறையிலுள்ள பாபுலிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு