Published:Updated:

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - வேலூர் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

குற்றவாளி விஜயகுமார்
குற்றவாளி விஜயகுமார்

வேலூர் காட்பாடியை அடுத்த சேவூர் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ். இவரின் மகன் விஜயகுமார் (29). கூலி வேலை செய்துவந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்றார்.

விஜயகுமார்
விஜயகுமார்

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, `யாரிடமும் நடந்ததைப் பற்றி வாய் திறக்கக் கூடாது’ என்று மிரட்டியுள்ளார். பயத்திலேயே இருந்த சிறுமிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது.

2 ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்; தந்தை உட்பட 2 பேர் கைது! - கேரளச் சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம்

பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகே சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பதறிப் போன பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர்.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

போலீஸார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை, வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு வழங்கினார்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் குற்றவாளி என நிரூபணமான விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

சிறை
சிறை

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்தச் சிறுமி மேஜராகும் வரை அந்தத் தொகையை வைப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தினார். இதையடுத்து, குற்றவாளி விஜயகுமார் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.