Published:Updated:

வேலூர்: குழந்தை பிரசவித்த 13 வயது சிறுமி... விசாரணையில் சிக்கிய தந்தை - சிறையிலடைத்த போலீஸ்!

சிறுமி ( (சித்திரிப்புப் படம் ) )

13 வயது சிறுமி குழந்தையைப் பிரசவித்த நிலையில், அவரைப் பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம், வேலூரில் நடந்திருக்கிறது.

வேலூர்: குழந்தை பிரசவித்த 13 வயது சிறுமி... விசாரணையில் சிக்கிய தந்தை - சிறையிலடைத்த போலீஸ்!

13 வயது சிறுமி குழந்தையைப் பிரசவித்த நிலையில், அவரைப் பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம், வேலூரில் நடந்திருக்கிறது.

Published:Updated:
சிறுமி ( (சித்திரிப்புப் படம் ) )

வேலூர் மாநகர்ப் பகுதியைச் சேர்ந்த 45 வயதாகும் நபர் ஒருவர் வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். மகன், 13 வயதுடைய தன் மகளை அதே பகுதியில் வசிக்கும் தன் தாயின் அரவணைப்பில் விட்டிருந்தார் அந்த நபர். 8-ம் வகுப்பு படித்துவந்த அந்தச் சிறுமி தினமும் தன் தந்தைக்கு சாப்பாடு கொண்டுசெல்வது வழக்கம். இந்த நிலையில், சிறுமி திடீரென கர்ப்பமாகியிருக்கிறார். நேற்று முன்தினம் அவருக்குப் பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

வேலூர்
வேலூர்

அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து, மருத்துவர்கள் தரப்பிலிருந்து வேலூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பெற்ற தந்தையே சிறுமிக்கு கொடூர தீங்கு இழைத்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

தொடர்ச்சியாக சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததில், சிறுமி கர்ப்பமடைந்து குழந்தை பிரசவித்திருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் அந்தக் கொடூரத் தந்தையை வேலூர் மகளிர் போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.