Published:Updated:

`மார்பிங் போட்டோ; பணம் கேட்டு மிரட்டல்!’ - ஃபேஸ்புக் நண்பரால் அதிர்ச்சியடைந்த நர்ஸ்

சரத்குமார்
சரத்குமார்

ஃபேஸ்புக் மூலம் பழகிய நர்ஸின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்துள்ள பி.கே.புரம் மகாதேவமலை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (21), டிராக்டர் ஓட்டுநர். இவருக்கு, குடியாத்தம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஓராண்டுக்கு முன்னர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். அந்தப் பெண் ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்துவருகிறார்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்
Representational Image

பக்கத்து ஊர்க்காரர் என்பதால் சரத்குமாரின் பேச்சை நம்பி, தன்னுடைய வாட்ஸ்அப் நம்பரையும் பகிர்ந்திருக்கிறார் அந்த நர்ஸ். இந்தநிலையில், ஹைதராபாத்திலிருந்து தன்னுடைய சொந்த கிராமத்துக்கு நர்ஸ் வந்திருப்பதைத் தெரிந்துகொண்ட சரத்குமார், வாட்ஸ்அப்பில் ஆபாசமான பதிவுகளைப் பதிவிட்டு, உல்லாசமாக இருக்க அழைத்ததாகக் கூறப்படுகிறது.

`கணவருக்கு மொட்டைக் கடிதம்; மார்பிங் போட்டோக்கள்!' இளம்பெண் விவகாரத்தில் சிக்கிய அரசு மருத்துவர்

அதிர்ச்சியடைந்த அந்த நர்ஸ், சரத்குமாரைக் கண்டித்துவிட்டு, அவருடன் பேசவும் மறுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த சரத்குமார், நர்ஸின் போட்டோவை ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்து அவரது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து நர்ஸுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார்.

சரத்குமார்
சரத்குமார்

`இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றாமல் இருக்க இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று சரத்குமார் மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். இதனால், பயந்துபோன அந்த நர்ஸ், தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதிருக்கிறார். திடுக்கிட்ட பெற்றோர், உடனடியாக குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு