Published:Updated:

விருதுநகர்: கருணை வேலைக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட அதிகாரி?! - ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

லஞ்சம்

"பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க எங்களால அவ்வளவு பணம் தர முடியாதுன்னு சொல்லவும், `5 ஆயிரம் ரூபாய் குறைச்சுக்கோங்க’னு சொல்லி 15 ஆயிரம் ரூபா கேட்டுருக்காரு.’’

விருதுநகர்: கருணை வேலைக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட அதிகாரி?! - ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

"பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க எங்களால அவ்வளவு பணம் தர முடியாதுன்னு சொல்லவும், `5 ஆயிரம் ரூபாய் குறைச்சுக்கோங்க’னு சொல்லி 15 ஆயிரம் ரூபா கேட்டுருக்காரு.’’

Published:Updated:
லஞ்சம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் (சத்துணவு) பணியாற்றிவருபவர் செல்வராஜ். சமீபத்தில் புதிதாக விருதுநகர் மாவட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், கருணை அடிப்படையில் பணி கேட்டு விண்ணப்பித்தவரிடம் பணி நியமனத்துக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ விருதுநகர்‌ மாவட்டத்தில் வைரலாகிவருகிறது.

அதிகாரி செல்வராஜ்
அதிகாரி செல்வராஜ்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி யூனியனுக்குட்பட்ட வளையபட்டி பள்ளியில் சமையலராகப் பணியாற்றிவந்த பெண், பணியில் இருக்கும்போதே திடீரென இறந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து வாரிசு அடிப்படையில் தாயின் பணியைத் தனக்கு வழங்குமாறு கேட்டு அவருடைய மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணைப்பணிக்கு விண்ணப்பித்திருக்கிறார். சில நிர்வாக காரணங்களால் இந்தப் பணி நியமனம் தள்ளிப்போடப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 08.07.2022 அன்று புதிதாகப் பணியில் சேர்ந்த அதிகாரி செல்வராஜ் அதுவரை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஃபைல்களையெல்லாம் புரட்டிப்பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கருணை அடிப்படையிலான பணி நியமனம் நிலுவையிலிருப்பதை கவனித்த அவர், சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரின் சகோதரனைத் தொடர்புகொண்டு பணிநியமன ஆணை வழங்க பணம் கேட்டதாகத் தெரிகிறது.

பணம் தொடர்பாக அதிகாரி செல்வராஜுக்கும், விண்ணப்பத்தாரரின் சகோதரனுக்கும் இடையே நடந்ததாகச் சொல்லப்படும் போன் உரையாடலின்படி, "ஆர்டர் நாளைக்கு, நாளை கழிச்சுக்கூட வரலாம். இல்லை 10 நாள்கூட ஆகலாம். ஆனா நீங்க ரகசியம் காப்பாத்தணும்” என அதிகாரி பேசுகிறார். அதற்கு, ``சரிங்க சார் அமௌண்ட்தான் அதிகமா இருக்குற மாதிரி...” என குரலை உள்ளுக்குள் இழுக்கிறார் விண்ணப்பதாரரின் சகோதரன் எனச் சொல்லப்படுபவர்.

அதற்கு மறுமுனையில், ``ஆமாங்க வேலை இருக்குதுல்ல... அதுக்குச் செய்ய வேண்டாமா... இப்போல்லாம் சமையலர் வேலை நீங்க ரூ.5 லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது. ஏன்னா, இது நிரந்தர வேலை. ரொம்ப நாள் பெண்டிங்ல கிடந்த உங்க ஃபைலை நானாகவே தேடிக் கண்டுபிடிச்சு உங்களுக்கு போன் பண்றேன்னா அதைப் புரிஞ்சிக்கணும். கஷ்டப்படுற உங்களுக்கு வேலை கிடைக்கட்டுமேனுதான் நானே உங்ககிட்ட பேசுறேன். அதனால நாளைக்கு வரும்போது 15,000-ஐ எப்படியாவது கொண்டு வந்திருங்க. விஷயம் வெளியே தெரியக் கூடாதுங்க. அதுபோல நீங்க வர்றதை யாருகிட்டேயும் சொல்லிட்டு வரக் கூடாது பாத்துக்கோங்க. நாளைக்கு காலையில 8 அல்லது 8:30 மணிக்குள்ள வந்துருங்க” எனப் பேசும் வகையில் உள்ளது அந்த ஆடியோ.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வராஜிடம் பேசினோம். ``அந்த ஆடியோவுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. நான் ரொம்ப கண்டிப்பான ஆபீஸர். அதுபோல, பாவப்பட்டவங்களுக்கு என்னால வேலை கிடைக்கட்டும்னுதான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். நான் இங்க வந்ததுக்குப் பிறகுதான் பெண்டிங்ல இருந்த நிறைய ஃபைல்களை முடிச்சுக் கொடுத்திருக்கேன். அந்த ஆடியோவில் தேவையில்லாம மாட்டிவிட்டுட்டாங்க" என்றார்.

சத்துணவு ஊழியர் சங்கத்தினரிடம் பேசினோம். ``இந்த ஆபீஸர் புதுசா வேலைக்குனு விருதுநகர் மாவட்டத்துக்கு வந்ததிலிருந்து பணத்து மேலேயே குறியா இருக்கிறதா எங்களுக்குத் தகவல் வந்துச்சு. ஒவ்வொரு இடத்துலயும் ஆய்வுங்கிற பேர்ல அது சரியில்லை... இது சரியில்லைன்னு சொல்லி 1.000, 1.500 ரூபாய்னு சமையலர்கிட்ட பணம் வசூலிச்சிட்டுப் போயிருக்கிறார். கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க `எங்களால அவ்வளவு பணம் தர முடியாது’ன்னு சொல்லவும், `5 ஆயிரம் ரூபாய் குறைச்சுக்கோங்க’னு சொல்லி 15 ஆயிரம் ரூபா கேட்டுருக்காரு. இது சம்பந்தமான தகவல் எங்களுக்குக் கிடைச்சதுமே மற்ற அதிகாரிங்ககிட்ட பேசுனோம். மற்ற அதிகாரிகளுக்கும் செல்வராஜ் சார் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனா, அவங்களும் இதைப் பெருசா கண்டுக்கலை. வேலை கேட்டு விண்ணப்பித்த குடும்பத்துக்கு இந்தக் கருணைப் பணி ரொம்ப முக்கியமானது. அதனால செல்வராஜ் சார்கிட்ட அமைதியா கேளுங்கனு சொன்னோம்.

லஞ்சம்
லஞ்சம்

ஆனா, விண்ணப்பதாரரின் சகோதரனுக்கு போன் செய்து பேசின செல்வராஜ் சார், பணத்தை எடுத்துட்டு வரச் சொல்லி நேரம் குறிச்சிருக்காரு. அவர் கூப்பிட்ட அந்த நாள்ல வெறும் 5,000 ரூபாயை மட்டும்தான் அந்தக் குடும்பத்தால புரட்ட முடிஞ்சது. அதனால அந்த 5 ஆயிரம் ரூபா பணத்தை முன்தொகையா வெச்சுக்கோங்கனு சொல்லி செல்வராஜ் சார்கிட்ட அந்த குடும்பத்தினர்கள் கொடுத்திருக்காங்க. இது வெளியில தெரிஞ்ச உண்மை. இதுபோல அவரு பல இடங்களில் சமையலர், உதவி சமையலரையும் அச்சுறுத்தி கட்டாயப் பண வசூலில் ஈடுபட்டுருக்காரு. எனவே, நேர்முக உதவியாளர் செல்வராஜ்மேல துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமாரிடம் பேசினோம். "பணி நியமனத்துக்கு லஞ்சம் கேட்டது தொடர்பாக இதுவரையிலும் எனது கவனத்துக்கு புகார்கள் வரவில்லை. இது தொடர்பான புகார்கள் வரப்பெற்றால் நிச்சயம் அதன்மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.