Published:Updated:

`அதிர்ச்சி... ஆனால், உண்மை!' பாலியல் குற்றவாளிகளுக்கு மக்களின் பதில் இதுவே! #VikatanPollResults

`இந்தியாவின் மகள்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளுக்குத் தீர்வாக நீங்கள் கருதுவது என்ன?' என விகடன் வாசகர்களிடம் கருத்து கேட்டிருந்தோம். அதன் முடிவுகள் இங்கே.

sexual harassment
sexual harassment

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் மரணம் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. இதற்கடுத்தும் இன்னும் மனதை உலுக்கச்செய்யும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

`கையில் கண்ணாடித் துண்டு; எரிக்கப்பட்ட பெண் உடல்!' - பிரியங்கா மரணத்தைத் தொடர்ந்து அடுத்த கொடூரம்

இப்படித் தொடர்ந்து நிகழும் இந்தியாவின் மகள்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டையே கொதிப்பிலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளன. இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷங்கள் தேசம் முழுவதும் வலுத்து வருகின்றன. இப்படிப்பட்ட வன்முறைகளுக்காக தீர்வு என்ன? - இந்தக் கேள்வியை விகடன் வாசகர்களிடம் பல்வேறு தளங்களில் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்களும், சர்வே முடிவுகளும்...!

விகடன் ட்விட்டர் சர்வே முடிவுகள்
விகடன் ட்விட்டர் சர்வே முடிவுகள்

ஹலோ மூலமாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்....

விகடன் ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்
விகடன் ஹலோ பக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்

இதேபோல விகடன் தளத்திலும் இரண்டு சர்வேக்கள் எடுத்திருந்தோம். அதன் முடிவுகள்...

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்
விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்
விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட  மற்றொரு சர்வே முடிவுகள்
விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு சர்வே முடிவுகள்

இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து தளங்களிலும் வாசகர்களின் கருத்துக்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. மொத்த வாசகர்களில் 65.92 சதவிகித வாசகர்கள் `குற்றவாளிகளுக்கு மரணதண்டனை' என்பதையே வலியுறுத்தியுள்ளனர். அதற்கடுத்ததாக `குற்றவாளிக்கு கடும் தண்டனை' என்ற பதிலை 18.4 சதவிகித மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Vikatan Poll Results
Vikatan Poll Results

வாசகர்கள் அளித்த சில கமென்ட்ஸ்...

வாசகர்களின் கருத்துகள்
வாசகர்களின் கருத்துகள்

மரண தண்டனையும், கடும் தண்டனைகளும் மட்டுமே குற்றவாளிகளிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை; எதிர்கால குற்றங்களையும் தடுத்துவிடுவதில்லை. கடந்தகால சம்பவங்களிலிருந்து பார்க்கையில் இதுவே கண்கூடு. மரண தண்டனைக்கு எதிராக வாதிடும் மனித உரிமை ஆர்வலர்களின் வாதங்களும் இவையே. இருப்பினும் குற்றங்களின் கொடூரத்தைப் பொறுத்து மக்களின் மனம் இப்படிப்பட்ட உடனடி எதிர்வினைகளையே எதிர்பார்க்கின்றன என்பதே இந்த முடிவுகள் உணர்த்தும் உண்மை. அதையே இந்த சர்வேக்களின் மூலம் மக்களின் கருத்தாக பிரதிபலித்திருக்கிறோம். மற்றபடி, மரண தண்டனைக்கு எதிராகவே நிற்கிறான் விகடன்.