Published:Updated:

கும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..? வழக்கு என்ன ஆனது?

women
News
women

கும்பகோணத்தில் வன்முறை செய்யப்பட்ட பெண்ணின் வழக்கு குறித்த அப்டேட்!

"கடந்த ஆண்டு கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கிக்குப் பணி பயிற்சிக்காக வந்த ராஜஸ்தான் மாநிலப் பெண்ணை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்தன. 'குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராகப்போவதில்லை' என்று அப்போது வக்கீல்கள் கூறினர். இப்போது அந்த வழக்கு என்ன ஆனது..? வங்கி நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது உதவிகள் செய்ததா, தீர்ப்பு எப்போது வழங்கப்படும்?" என்று விகடனின் # DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார், பிரபாகரன் வைகோ ராஜேந்திரன் என்ற வாசகர்.

doubt of common man
doubt of common man

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கிறதா? இங்கே கேளுங்கள்...

இந்த வழக்கின் இப்போதைய நிலவரத்தைப் பார்ப்பதற்கு முன், நிகழ்ந்த சம்பவம் குறித்துப் பார்க்கலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரக் ஷிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தார். கும்பகோணத்தில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் வெளிமாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதில் பங்கேற்பதற்காக 2018, டிசம்பரில் சென்னை வந்த ரக் ஷிதா திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கும்பகோணம் வந்தார். இரவு 11 மணிக்கு ரயில் கும்பகோணம் வந்தது. இன்னும் 10 நிமிடத்தில் அறைக்கு வந்துவிடுவதாகத் தன் தோழியிடம் தெரிவித்த ரக் ஷிதா, அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டோவை அழைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரக் ஷிதாவுக்கு தமிழ் தெரியாது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அந்த ஆட்டோ டிரைவர் அன்பரசு, ரக் ஷிதா செல்ல வேண்டிய முகவரி, தொலைதூரத்தில் இருப்பதாகச் சொல்லி நகரத்துக்கு வெளியே இருட்டான பகுதிகளில் சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். ரக் ஷிதாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. உடனடியாக `ஹெல்ப்', 'ஹெல்ப்' என்று கத்தியிருக்கிறார்.

அன்பரசு, தினேஷ்
புருஷோத்தமன், வசந்த்
அன்பரசு, தினேஷ் புருஷோத்தமன், வசந்த்

ரக் ஷிதா திடீரென கூச்சலிட்டதால் பயந்துபோன ஆட்டோ டிரைவர், செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திய அன்பரசு கருணையே இல்லாமல் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

கும்மிருட்டு... எங்கு நிற்கிறோம் எனத் தெரியவில்லை... எந்தத் திசையில் செய்வது என்று புரியவில்லை. பயமும் பதற்றமும் வாட்ட, டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு சாலையில் நடக்கத் தொடங்கினார். அப்போது அந்தப் பகுதியில் தினேஷ், வசந்த், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நான்கு பேர் மது அருந்திவிட்டு போதையில் நின்றுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் சற்றே நிம்மதியடைந்த ரக்‌ஷிதா, நடந்த அனைத்தையும் அவர்களிடம் தெரிவித்து உதவி கேட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த இளைஞர்கள் கண்களாலேயே திட்டம் தீட்டிவிட்டார்கள். உரிய முகவரியில் சேர்ப்பதாகச் சொல்லி தினேஷ், ரக் ஷிதாவை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டார். மற்றவர்கள் அவரவர் வாகனங்களில் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

ரக்‌ஷிதா செல்ல வேண்டிய இடத்துக்குப் போகாமல், நாச்சியார்கோயில் பைபாஸ் சாலையில் உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். தான் விபரீதத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்த ரக்‌ஷிதா, அழுது கூச்சலிட்டார். அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அமைதியாக்கி அதிகாலை வரை வைத்திருந்து நான்கு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு, தப்பிச்சென்றுவிட்டனர்.

doubt of common man
doubt of common man

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கிறதா? இங்கே கேளுங்கள்...

மறுநாள் காலை விடிந்த பிறகு, அப்பகுதியிலிருந்த சிலர் உதவியோடு வங்கிக்கு வந்த ரக் ஷிதா, நிர்வாகத்திடம் தனக்கு நடந்த விபரீதங்களைக் கூறி அழுதார். ரக் ஷிதாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பகோணம் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் செய்யப்பட்டது. வங்கி நிர்வாகமும் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்க, ரக் ஷிதாவை ஆபத்தான இடத்தில் இறக்கிவிட்டுச் சென்ற ஆட்டோ டிரைவர் அன்பரசு உட்பட, பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

தற்போது இந்த வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று வங்கி தரப்பில் விசாரித்தோம். "பாதிக்கப்பட்ட பெண் தற்போது டெல்லியில் பணிபுரிந்து வருகிறார். வழக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போதுமட்டும், ரக்‌ஷிதாவும் அவரின் பெற்றோரும் இங்கு வந்து செல்கின்றனர். வழக்கு மற்றும் அவர்கள் வந்துசெல்வதற்கான செலவுகள் அனைத்தையும் வங்கி நிர்வாகமே பார்த்துக்கொள்கிறது..." என்கிறார்கள்.

லோகநாதன், கும்பகோணம் பார்கவுன்சில் தலைவர்
லோகநாதன், கும்பகோணம் பார்கவுன்சில் தலைவர்

ரக்‌ஷிதாவின் பெற்றோர் தரப்பில் பேச முயன்றோம். "தீர்ப்பு வரும்வரை ஏதும் பேச விரும்பவில்லை" என்ற பதிலே நமக்குக் கிடைத்தது. ரக் ஷிதா பாதிப்பின் மிரட்சியிலிருந்தும் வலியிலிருந்தும் இன்னும் மீளவில்லை என்கிறார்கள். "இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராக மாட்டோம்" என்று பார் கவுன்சில் அறிவித்திருந்தது. இதுகுறித்து கும்பகோணம் பார்கவுன்சில் தலைவர் லோகநாதனிடம் பேசினோம்.

"குற்றவாளிகள் தரப்புக்கு இங்கிருந்த வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. வெளியில் இருந்துதான் வக்கீல்கள் வருகிறார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தினமும் நான்கு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தீர்ப்பு சீக்கிரமே வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

doubt of common man
doubt of common man

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கிறதா? இங்கே கேளுங்கள்...

வழக்கின் நிலை குறித்து கும்பகோணம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரனிடம் பேசினோம். "இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் இன்னும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதுவும் சில தினங்களில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்பிருக்கிறது. இந்தக் குற்றச் செயலில் ஈட்டுப்பட்ட நான்கு பேருக்கும் நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும்'' என்றார்.