Published:Updated:

`ஒரே நேரத்தில் 60 ஆபாச வீடியோக்கள் ஷேர்!' - பதறிய கேரள பெண் ஊழியர்கள்... சிக்கிய அதிகாரி

மலையரசு

ஒரே நேரத்தில் ஷேர் ஆக வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த பெண் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே ஒரு பெண் ஒருவர் மேலதிகாரியும், குரூப்பின் அட்மினை தொடர்புகொண்டு இப்படி நடந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

கேரள தலைமைச்செயலகம்
கேரள தலைமைச்செயலகம்

சட்டசபை நிகழ்வுகளில், முக்கியமான கூட்டங்களில், அரசு அலுவலகங்களில் சிலர் வேலை நேரங்களின்போது ஆபாசப் படங்களைப் பார்த்ததாகச் சில செய்திகளை அவ்வப்போது கேட்டிருப்போம். இந்தநிலையில் கேரள அரசின் தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு இதுபோன்ற வித்தியாசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, கேரள அரசின் தலைமைச் செயலக ஊழியர்கள் ``நம்மள் சகாக்கள்'' என்கிற வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் ஆண், பெண் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள் நிறைய பேர் இந்தக் குரூப்பில் மெம்பர்களாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அதிகாரிகள் அசோசியேசன் மீட்டிங் தொடர்பாக விவாதித்துவந்துள்ளனர்.

கேரள தலைமைச்செயலகம்
கேரள தலைமைச்செயலகம்

அப்போது ஆண் உறுப்பினர் எண்ணிலிருந்து ஆபாச வீடியோக்கள் குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றோ, இரண்டோ அல்ல மொத்தம் 60 ஆபாச வீடியோக்கள் ஒரே நேரத்தில் ஷேர் ஆக குரூப்பில் இருந்த பெண் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே பெண் ஒருவர் மேலதிகாரியையும் குரூப்பின் அட்மினையும் தொடர்புகொண்டு இப்படி நடந்துள்ளது எனக் கூறியுள்ளார். அதன் பிறகுதான் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த அட்மினுக்குத் தெரியவந்துள்ளது. பின்னர் வீடியோக்களை போஸ்ட் செய்த அதிகாரிக்குப் போன் செய்துள்ளார். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதன்பின் சில மணி நேரங்களுக்கு அட்மின் குரூப்பில் ஒரு மெசேஜ் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ``வீடியோக்களை அனுப்பிய உறுப்பினரின் போன் தொலைந்துவிட்டதாகவும், திருடிய நபர்தான் அந்த வீடியோக்களை அனுப்பினார் என்றும், நடந்த சம்பவத்துக்கும் அந்த அதிகாரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலால் பெண் உறுப்பினர்கள் அமைதியாகினர். ஆனால், அடுத்தநாளே தொலைந்துபோனாதாகக் கூறப்பட்ட அந்த போன் வீடியோவை ஷேர் செய்த அதே அதிகாரியிடம் இருந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ

அப்போதுதான் அட்மின் குரூப்பில் பொய் சொன்னது தெரியவந்துள்ளது. உடனே அட்மினுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்த பெண் அதிகாரிகள், உடனடியாக அந்த குரூப்பிலிருந்து வெளியேறியுள்ளனர். அனைத்து உறுப்பினர்களும் வெளியேறியதால் அந்த குரூப் டி-ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. நடந்த இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மற்ற அதிகாரிகள் மூலமாக ஊடகங்களுக்குக் கசியத் தொடங்கியுள்ளது. பெண் அதிகாரிகளைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிய அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

news credits - mathrubhumi