Published:Updated:

சொந்தமாக தனித்தீவு... `தனிநாடு' ப்ளான்... மத்திய அரசை அதிரவைத்த நித்தி!

`இன்டர்போல் உதவியுடன் நித்தியானந்தாவைக் கைதுசெய்யுங்கள்' என்று குஜராத் மாநில காவல்துறைக்கு குஜராத் நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நித்தியானந்தாவை இனி கைதுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ எனக் கவலைகொள்கிறது மத்திய அரசு.

நித்தியானந்தா
நித்தியானந்தா

அரசுக்கே ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. இவரை கைதுசெய்ய நீதிமன்றமே உத்தரவிட்டும் அதைப் பற்றி கவலையின்றி ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பொழுதுக்கு ஒரு கெட்டப்பும், நாளுக்கு ஒரு வீடியோவுமாக உல்லாச மோடில் இருக்கிறார். நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து வெளியேறிய பல்வேறு நபர்களிடம், குஜராத் மாநில காவல்துறையினரும், கர்நாடக மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் ஒரு தகவலை அனைவரும் சொல்லியுள்ளனர். ``பருவமடையாத பெண் குழந்தை களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் நித்தியானந்தா. இரவு நேரங்களில் பெண் குழந்தைகளை தனது அறைக்கு வரவழைத்து, தீட்சை என்ற பெயரில் குழந்தைகளை வக்கிரமான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கியுள்ளார்" என்று கூறியிருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை தற்போது அதிகாரிகள் திரட்டிவருகிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமும் நித்தியானந்தாமீது பாயக்கூடும்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் துலாபாரம் நிகழ்ச்சி ஆண்டுக்கு நான்கு முறை நடக்குமாம். அப்போது நித்தியானந்தாவின் எடைக்கு நிகரான தங்கத்தை பக்தர்கள் வழங்குவர். இதுவரை அப்படிப் பெறப்பட்ட நகைகளின் எடை மட்டுமே ஆறு டன் எனக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பகுதி இப்போது நித்தியானந்தாவின் தீவுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட அளவு நகை பிடதியில் இருந்துள்ளது. நித்தியானந்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தவுடன் மா அச்சலா, ரஷி ஆத்மார்த்தா என்ற இரண்டு பேர்மூலம் பிடதியில் இருந்த தங்கத்தை தமிழத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இப்போது இந்த விவரங்களையெல்லாம் தீவிரமாக விசாரித்துவருகிறது காவல்துறை.

`இன்டர்போல் உதவியுடன் நித்தியானந்தாவைக் கைதுசெய்யுங்கள்' என்று குஜராத் மாநில காவல்துறைக்கு குஜராத் நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நித்தியானந்தாவை இனி கைதுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ எனக் கவலைகொள்கிறது மத்திய அரசு. அதற்கான காரணத்தைக் கேட்டால், நம்மை மலைக்கவைக்கும் வகையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. இதுகுறித்து அவரது ஆசிரமத்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் நம்மிடம் பேசினார்கள்.

``பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து 2018-ம் ஆண்டு இறுதியில் வெளியேறினார் நித்தியானந்தா. ஆரம்பத்தில் 'அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார்' என்று அவரின் பக்தர்கள் சொன்னார்கள். பிறகு 'ஆன்மிகப் பயணமாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்' என்றார்கள். இந்த நிலையில்தான் நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, 'என் இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார். அவர்களை மீட்டுத் தர வேண்டும்' என்று குஜராத் மாநில காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்தே நித்தியானந்தா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

நித்தியானந்தா
நித்தியானந்தா

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரா அமைப்பின்மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அந்தத் தகவலைக் கேட்டு மத்திய அரசே அதிர்ச்சியடைந்துள்ளது" என்றவர்கள், "இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் பேசினால் மேலும் விவரங்கள் கிடைக்கும்" என்று சஸ்பென்ஸ் வைத்தனர். உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

``தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, அமெரிக்க பக்தர்கள்மூலம் வேலையை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டது. முதலில், பிடதியிலிருந்து ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கியுள்ளார் நித்தியானந்தா. அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார்.

> இதன் பின்னணியுடன், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் 'ஓஷோ பாணியில் மாஸ்டர் பிளான்' உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > உல்லாச கைலாசா! - கரீபியன் கடலில் நித்தியின் 'கன்னி'த்தீவு

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

இந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை இந்து மதத் தலைவராகக் கருதி, ராஜமரியாதையுடன் அவரை காட்மாண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 27 பேர் கிளம்பி, அந்தத் தீவில் தஞ்சமடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள்!

நித்தியானந்தா
நித்தியானந்தா

தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் தான் தற்போதுவரை இருக்கிறது. அந்தத் தீவை தனிநாடாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் நித்தியானந்தா. இந்தத் தகவல்தான் மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நித்தியானந்தா தரப்பிலிருந்து ஈக்குவடார் நாட்டின் அரசு உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தங்களது தீவை தனிப்பிரதேசமாக அறிவிக்க அனுமதி வேண்டும் என்று நித்தியானந்தா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஓர் இடத்தை தனிநாடாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் அவசியம். அதேபோல் புதிதாக ஒரு நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டுமென்றால், அதற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உலக நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கான வேலையை சில மாதங்களுக்கு முன்பே நித்தியானந்தா தரப்பு ஆரம்பித்துள்ளது.

> இதன் பின்னணியுடன், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் 'ஓஷோ பாணியில் மாஸ்டர் பிளான்' உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > உல்லாச கைலாசா! - கரீபியன் கடலில் நித்தியின் 'கன்னி'த்தீவு

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |