Published:Updated:

கமுதி: குடிப்பழக்கம்... தினமும் பிரச்னை! - கணவனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

 கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி.
கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி. ( விகடன் )

நிம்மதியின்றி இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்த அம்பிகா, அதிகாலை தனது வீட்டிலிருந்த அம்மிக் கல்லை அனுமந்த பெருமாளின் தலையில் போட்டிருக்கிறார்.

கமுதி அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த கணவரின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவி அம்பிகா.
மனைவி அம்பிகா.
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இருக்கிறது கிளாமரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்த பெருமாள் (58). இவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், மனைவியின் தங்கையான அம்பிகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில் அனுமந்த பெருமாள் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதையும், அங்கு மனைவி அம்பிகாவிடம் தகராறில் ஈடுபடுவதையும் வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

இதனால் மனவெறுப்பில் இருந்திருக்கிறார் அம்பிகா. இந்தநிலையில் கடந்த புதன் கிழமை இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அனுமந்த பெருமாள், மனைவி அம்பிகாவிடம் தகராறு செய்திருக்கிறார். அதன் பிறகு தனது அறைக்குச் சென்ற அனுமந்த பெருமாள் தூங்கிவிட்டார். இதனால் நிம்மதியின்றி இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்த அம்பிகா, அதிகாலையில் தனது வீட்டிலிருந்த அம்மிக் கல்லை அனுமந்த பெருமாளின் தலையில் போட்டிருக்கிறா. இதில் படுகாயமடைந்த அனுமந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலை செய்யப்ப்பட்ட அனுமந்த பெருமாள்
கொலை செய்யப்ப்பட்ட அனுமந்த பெருமாள்
உ.பாண்டி

இதையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய அம்பிகா, விருதுநகர் மாவட்டம் ம.ரெட்டியபட்டி காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். ரெட்டியபட்டி போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து கமுதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த கமுதி போலீஸார் அம்பிகாவைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். குடித்துவிட்டு தகராறு செய்த கணவரின் தலையில் மனைவியே அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு