Published:Updated:

ரௌடி நட்பு; பாத்ரூமில் புதைக்கப்பட்ட கணவன்! -மஞ்சள், பினாயிலால் சிக்கிய மனைவி

கொலை
கொலை

தன் கணவனோடு சண்டை போட்டுக் கொண்டு பூங்கொடி அவருடைய அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பூங்கொடிக்கும், புருஷோத்தமனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் தவறான நட்பால் கணவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றதோடு உடலை பாத்ரூமில் புதைத்து தினந்தோறும் மஞ்சள் தூவி, பினாயில் தெளித்து வந்த மனைவியால், சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

சேலம், சிவதாபுரம் செஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (45). இவரின் மனைவி பூங்கொடி (37). இவர்களுக்கு பவித்ரா என்ற மகளும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். சேட்டுவும் பூங்கொடியும் கட்டட வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பூங்கொடிக்கும், சோளம்பள்ளத்தைச் சேர்ந்த ரௌடி பட்டியலில் உள்ள புரு என்கிற புருஷோத்தமனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பூங்கொடிக்கும் அவரின் கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பூங்கொடி கணவரோடு சண்டை போட்டுவிட்டு, தன் ஆண் நண்பர் புருஷோத்தமனோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார். பிறகு ஊர்க்காரர்களின் அறிவுறுத்தலின்படி குழந்தைகளுக்காக வாழ்வதாகக் கூறி 4 மாதத்திற்கு முன்பு மீண்டும் கணவரின் வீட்டுக்கு வந்தார்.

சேட்டு வீடு
சேட்டு வீடு

சேட்டு அடிக்கடி குடித்துவிட்டு வந்து, பூங்கொடியிடம், `உன் கள்ளக்காதலனோடு வாழ வேண்டியதுதானே? எதற்காக இங்கு வந்தாய்?' என்று கேட்டு பிரச்னை செய்துள்ளார். இதைப் பூங்கொடி தன் ஆண் நண்பரிடம் கூறி சேட்டுவைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதையடுத்து, கடந்த 7-ம் தேதி குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இரவு குடிபோதையில் அமர்ந்திருந்த சேட்டுவை பூங்கொடியும், புருஷோத்தமனும் சேர்ந்து துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

உடலை வீட்டுக்குப் பின்புறம் உள்ள பாத்ரூமில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர். பிறகு வீட்டுக்கு வந்த குழந்தைகள், `அப்பா எங்கே?' என்று கேட்டதற்கு, அவர் வெளியூர் சென்று விட்டதாகக் கூறியுள்ளார். தினந்தோறும் பாத்ரூமில் மஞ்சள் தூவி, பினாயில் தெளித்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த குழந்தைகள், `எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு பாத்ரூம் சுத்தம் செய்வதாகக் கூறியுள்ளார்.

`தினமும் இதையே சொல்லி திட்டினார்!' - நண்பரின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

ஒரு கட்டத்தில் பதற்றம் அடைந்த பூங்கொடி குழந்தைகளைத் தனிமையில் தவிக்கவிட்டு தன் கள்ளக்காதலனோடு ஓடிவிட்டார். குழந்தைகள் தன் சித்தப்பா ராஜேந்திரனின் வீட்டுக்குச் சென்று சம்பவத்தைச் சொல்லி அழுதிருக்கிறார்கள். இதையடுத்து, தன் அண்ணனைக் காணவில்லை என்று சூரமங்கலம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக காவல்துறை விசாரணையில் பாத்ரூமில் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.

உதவி கமிஷனர் நாகராஜ்
உதவி கமிஷனர் நாகராஜ்

இதுபற்றி சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜ், ``சேட்டு என்பவருக்கும் பூங்கொடி என்பவருக்கும் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் கட்டட வேலை செய்யக் கூடியவர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு பூங்கொடி அவருடைய அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பூங்கொடிக்கும், புருஷோத்தமனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பிறகு ஊர்க்காரர்களின் அறிவுறுத்தல்படி குழந்தைகளுக்காகப் பூங்கொடி 4 மாதத்துக்கு முன்பு கணவனின் வீட்டுக்கு வந்துள்ளார். சேட்டு தினமும் குடித்துவிட்டு மனைவியைத் திட்டி இருக்கிறார். அதையடுத்து, தன் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து பாத்ரூமில் புதைத்துள்ளனர். பூங்கொடியின் தவறான செயலால் தற்போது அவருடைய குழந்தைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாக தவிக்கிறார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு