Published:Updated:

`அங்கு நீ போகக் கூடாது!'- கணவர் மீதான கோபத்தில் மகனைக் கொன்றுவிட்டு உயிரை மாய்த்த மனைவி

எம்.திலீபன்

`சாவு வீட்டுக்கு நீ போகக் கூடாது' என்று கணவன் சொன்னதால் ஆத்திரத்தில் மகனைக் கொன்றுவிட்டு மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கணவன்,மனைவி
கணவன்,மனைவி

அரியலூர் நகரில் உள்ள புதுமார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரின் மனைவி சுமிதா. இவர்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள்.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.
அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

சுமிதாவின் முதல் கணவர் விபத்தில் இறந்துவிட்டார். ஜெயக்குமாரின் முதல் மனைவி புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனிடையே, இரு வீட்டார் ஒப்புதலோடு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ரித்தீஷ் என்ற மகன் இருந்தார்.

இந்த நிலையில், குத்தாலத்தில் சுமிதாவின் பெரியப்பா வீட்டில் துக்க நிகழ்வு நடந்திருக்கிறது. அதற்குச் செல்ல அவரின் கணவர் ஜெயக்குமாரிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ``என்னை மதிக்காதவர்கள் வீட்டுக்குப் போகவேண்டாம்" என்று கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடுமையாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்பு கீழ் வீட்டில் உள்ளவர்கள் பிரச்னையைத் தீர்த்துவிட்டு ஜெயக்குமாரை வெளியில் செல்ல வற்புறுத்தியிருக்கிறார்கள்.

சுமிதா
சுமிதா

அவரும் வெளியில் சென்றுவிட்டார். ஆத்திரமடைந்த அவரின் மனைவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தாய் அமுதாவுக்குப் போன் செய்து, ``எனக்குப் போட்ட நகைகளை வீட்டில் உள்ள பீரோ லாக்கரில் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறிவிட்டு போனை சுவிட்ச்ஆப் செய்துள்ளார். பின்னர் 2 வயது மகன் ரித்திஷை தூக்கில் மாட்டிவிட்டுள்ளார். இதனால் சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். பின்னர் சுமிதாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்‌.

அரியலூர்
அரியலூர்

இது குறித்து, சுமிதாவின் தாய் அமுதா கொடுத்த புகாரின்பேரில், கயலாபாத் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். குழந்தையைக் கொன்று, சுமிதா தற்கொலை செய்துகொண்டதற்கு வரதட்சணைக் கொடுமை காரணமா என அரியலுார் ஆர்.டி.ஓ., சத்யநாராயணன் விசாரித்து வருகிறார்.