Published:Updated:

கேரளா: பகிரப்படும் மனைவிகள்; கட்டாயப்படுத்தும் கணவன்! - கேரளாவை அதிரவைத்த வொயிஃப் ஸ்வாப்பிங் கும்பல்

மனைவிகளை மாற்றிக்கொள்ளும் `வொயிஃப் ஸ்வாப்பிங்’ கும்பல்
News
மனைவிகளை மாற்றிக்கொள்ளும் `வொயிஃப் ஸ்வாப்பிங்’ கும்பல்

``பரஸ்பரம், விருப்பத்துடன் கப்புள் ஷேரிங் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து புகார் வராமல் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்கிறார்கள் போலீஸார்.

கேரள மாநிலம், கோட்டயம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுகச்சால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் தனது கணவர், வேறு ஆண்களிடம் தன்னைப் பாலியல்ரீதியாகப் பகிர்வதாகவும், அவர்கள் இயற்கைக்கு முரணாகத் தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், வேறு ஆண்களுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு 'வொயிஃப் ஸ்வாப்பிங்' என்ற பெயரில் பல கும்பல்கள் சமூக வலைதளங்களில் செயல்பட்டுவருவது தெரியவந்தது. கப்புள் ஷேரிங் (Couple Sharing) என்ற பெயரில் இவர்கள் சமூக வலைதளங்களில் குழுவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. `சீக்கிரட் சாட்' மூலம் இவர்கள் தொடர்புகொண்டு மனைவிகளை மாற்றிக்கொண்டு பாலியல் உறவில் ஈடுபடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிலர் இதற்காகப் பணம் கொடுக்கும் நிலை இருப்பதாகவும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

டெலிகிராம், மெசெஞ்சர் ஆப்களில் இதற்காக ரகசியக் குழுக்களை ஏற்படுத்தி இவர்கள் செயல்பட்டுள்ளனர். சங்கனாச்சேரி இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் கார்கச்சால் பத்தநாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர், ஆலப்புழா, எர்ணாகுளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் ஏழு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களின் மொபைல்போன், சமூக வலைதளக் கணக்குகளைக் கண்காணித்த போலீஸார் இந்தக் கும்பலில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சங்கனாச்சேரி பெண்ணின் புகார் காரணமாக பல குழுக்களை போலீஸார் கண்காணித்துள்ளனர். அப்போது, சமூகத்தில் அந்தஸ்துமிக்கவர்கள் எனக் கருதப்படும் பல வி.ஐ.பி-க்களும் இந்தக் குழுவில் ஃபேக் ஐடி மூலம் அங்கத்தினராக இருப்பதாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தக் குழுவில் உள்ளவர்கள் தங்கள் இணையுடன் சேர்ந்த புகைப்படத்தை அப்லோடு செய்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, அவர்களின் வீடுகளிலோ, பொதுவான விடுதிகளிலோ மனைவிகளை மாற்றி பாலியல் உறவுகொள்வதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

2019-ம் ஆண்டு காயாங்குளத்தில் ஷேர் சாட் மூலம் மனைவிகளை மாற்றுவதாகப் புகார் எழுந்தது. அதன் பிறகு சங்கனாச்சேரியில் இது போன்ற புகார் எழுந்திருக்கிறது. ``பரஸ்பரம், விருப்பத்துடன் கப்புள் ஷேரிங் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து புகார் வராமல் நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும், கட்டாயப்படுத்துவதாகப் புகார் வந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்கிறார்கள் போலீஸார்.