Published:Updated:

மேல வீதி, கீழ வீதியில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனை! - என்ன சொல்கிறார் சிதம்பரம் டிஎஸ்பி?

சிதம்பரம் நகரில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பது, பணப்பட்டுவாடா நடப்பது ஆகியவை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரி விற்பனை
லாட்டரி விற்பனை

சிதம்பரம் நகரில், தடைசெய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. பொது மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், மேல வீதி, கீழ வீதி போன்ற இடங்களில் லாட்டரி விற்பனை நடந்துவருகிறது. லாட்டரி விற்பனையால், ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால்தான், தமிழக அரசு லாட்டரி விற்பனையைத் தடை செய்தது.

லாட்டரி விற்பனை
லாட்டரி விற்பனை
Vikatan

இந்நிலையில், லாட்டரி விற்பனை குறித்த தகவல்கள் வைரலாகப் பரவி வருகிறது. ``சிதம்பரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் ஜம்பு பாய், மாரியப்பன் ஆகியோரால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்படிக்கு, பொது மக்கள் சிதம்பரம்'' என்று ஒருவர் கூறுவதுபோல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

லாட்டரி விற்பனை
லாட்டரி விற்பனை

இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, ``சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடந்துவருவது உண்மைதான். நான் வந்ததிலிருந்து இதுவரை 80 பேர்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தனி டீம் அமைத்துக் கண்காணித்து, நடவடிக்கை எடுத்துவருகிறேன். இன்னும் ஒரு சிலர் விற்பனை செய்துதான் வருகின்றனர். தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதால் பாதிக்கப்பட்ட சிலர், வேண்டுமென்றே எனது பெயரையும் இதில் இழுத்துள்ளனர்" என்றார்.