Published:Updated:

` இரண்டாவது கணவனையும் விட்டுவிட்டு வா!' -தாயின் 3-வது திருமண ஆசையால் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

தாய் மஞ்சுளா, அவரின் 3-வது கணவர் ராஜாமணி
தாய் மஞ்சுளா, அவரின் 3-வது கணவர் ராஜாமணி

முதல் திருமணம் ஆவதற்கு முன்னரே ராஜாமணியுடன் எனக்குப் பழக்கம் இருந்தது. இதுநாள் வரை அவர் என்னையே நினைத்துக்கொண்டு வாழ்வதாகக் கூறினார்.

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கம்மவான்பேட்டை மொட்டை மலையில் உள்ள முருகர் கோயில் அடிவாரத்தில், பெண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. வேலூர் தாலுகா போலீஸார் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாழனூர் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் குழந்தை எனத் தெரியவந்தது.

சம்பவ இடத்தில் பார்வையிட்ட காவல்துறையினர்
சம்பவ இடத்தில் பார்வையிட்ட காவல்துறையினர்

அந்தப் பெண்ணைப் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தியதில், குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரின் வாக்குமூலத்தில், ‘ ‘எனக்கு 23 வயதாகிறது. ஷூ கம்பெனியில் வேலை செய்துவந்தேன். பெற்றோர் என்னுடைய விருப்பமில்லாமல், என் வயதில் இருமடங்கு உள்ள தாய்மாமன் பஞ்சாட்சரத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தனர்.

வயது வித்தியாசம் கூறி என் தோழிகள் என்னைக் கேலி கிண்டல் செய்தனர். முதல் கணவனுடன் வாழப் பிடிக்காமல் தாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன்பிறகு, என் அக்காவின் ஆண் நண்பரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. இரண்டு பேரும் போனில் பேசிக்கொண்டோம். நெருக்கம் அதிகமானதால் அக்காவின் நண்பரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டேன். 6 மாதங்களுக்கு முன்பு எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

‘இரண்டாவது கணவரையும் விட்டுவிட்டு வா... நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று போனில் கூறினார்.
மஞ்சுளா

இந்தநிலையில், வேலூரை அடுத்த வரகூர் புதூர் நொறுக்குப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. முதல் திருமணம் ஆவதற்கு முன்னரே ராஜாமணியுடன் எனக்குப் பழக்கம் இருந்தது. இதுநாள் வரை அவர் என்னையே நினைத்துக்கொண்டு வாழ்வதாகக் கூறினார். ‘இரண்டாவது கணவரையும் விட்டுவிட்டு வா... நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று போனில் கூறினார். அவருடன் வாழ ஆசைப்பட்டேன். கடந்த 23-ம் தேதி இரண்டாவது கணவரிடமிருந்து பிரிந்து குழந்தையுடன் பேருந்து மூலம் வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்தேன்.

என்னைக் காதலன் ராஜாமணி இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சம்பவம் நடைபெற்ற கம்மவான்பேட்டை மொட்டை மலைக்குச் சென்றார். அங்குள்ள கோயிலில் திருமணம் செய்துகொள்வதற்காக தாலியையும் தயாராகக் கொண்டுவந்திருந்தார். அப்போது, ‘குழந்தை நமக்கு இடையூறாக இருக்கிறது; இது, நமக்கு வேண்டாம்; வேறு குழந்தையைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழலாம்’ என்றார். நானும் புது வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையைக் கொலை செய்துவிட சம்மதித்தேன். என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்ட ராஜாமணி குழந்தையைக் கொன்றார்.

Vikatan

பின்னர், மலை அடிவாரத்தில் குழந்தையின் உடலைத் தூக்கி வீசினார். அதன்பிறகு, நாங்கள் திருமணம் செய்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டோம். மூன்றாவது கணவருடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய இரண்டே நாளில் சிக்கிக் கொண்டேன்’’ என்று கூறியதாக காவல்துறையினர் சொல்கிறார்கள்.

மஞ்சுளாவின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரையும் மூன்றாவது கணவர் ராஜாமணியையும் கைதுசெய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு