Published:Updated:

`சேலை கட்டிக்கொண்டு பெண்ணாக உணர்வதாகக் கூறுகிறார்!’ -கணவனால் பெண் எடுத்த விபரீத முடிவு

தீக்குளிக்க முயன்ற ஜெயந்தி
தீக்குளிக்க முயன்ற ஜெயந்தி

கணவர் திருநங்கையாக மாறியதால், மனமுடைந்த பெண் தன் மூன்று குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (42). இவரின் மனைவி ஜெயந்தி (36). இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், ஜெயந்தி தன் 3 குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

வேலூர் கலெக்டர் அலுவலகம்
வேலூர் கலெக்டர் அலுவலகம்

திடீரென மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும் குழந்தைகள் மீதும் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். அதைத்தொடர்ந்து, ஜெயந்தியை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

`மன அழுத்தம்; அறுவை சிகிச்சை; ராணுவ விதிமீறல்!' -திருநங்கையாக மாறிய ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்

போலீஸாரிடம் அவர் கூறுகையில், ``என் கணவர் கட்டட வேலை செய்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் திருநங்கைகள் சிலருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. திடீரென அவரும் சேலை கட்டிக்கொண்டு பெண்ணாகவே தன்னை உணர்வதாகக் கூறுகிறார். எனக்கு அவமானமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற ஜெயந்தி
குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற ஜெயந்தி

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சொந்தக்காரர்களும் ஏளனமாகப் பேசி சிரிக்கிறார்கள். `சேலை கட்டிக்கொள்ள வேண்டாம்’ என்று அவரிடம் கூறினாலும் கேட்கவில்லை. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. இப்போது, எங்களைத் தவிக்க விட்டுவிட்டு திருநங்கைகளுடன் சென்றுவிட்டார்.

என் குழந்தைகளுக்கு அப்பா வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வறுமையில் தவிக்கிறோம். குழந்தைகள் பசியில் வாடுது. இந்த மன வேதனையில்தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்’’ என்று கூறி கதறி அழுதார்.

தீக்குளிக்க முயன்ற பெண்
தீக்குளிக்க முயன்ற பெண்

இதே பிரச்னைக்காக ஜெயந்தி ஏற்கெனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. `எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது’ என்று ஜெயந்திக்கு அறிவுரை கூறிய போலீஸார், குழந்தைகளுடன் அவரை மேல்மொணவூரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாக விட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு