Published:Updated:

`இனி இந்த நரகத்தில் என்னால் வாழ முடியாது' திருமணமான 7 மாதங்களில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

மரணம் (Representational image)
News
மரணம் (Representational image)

`` நல்லா பார்த்துப்போம்னு சொன்னாங்க... நம்பி கட்டிக் குடுத்தோம். கல்யாணம் ஆனதுல இருந்து மாமியாரும் கணவரும் அடிக்கடி சண்டை போட்டுருக்காங்க. ஒரு நாள்கூட என் பொண்ணை நிம்மதியா வாழ விடலை."

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகிலுள்ள முக்கிமலை படுகர் கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான ரம்யா ( பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கும், கோடேரி படுகர் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் ராஜ் என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுவந்திருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ரம்யா, முக்கிமலையிலுள்ள அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். தனது கணவரும் மாமியாரும் அடிக்கடி தன்னிடம் சண்டையிடுவதாகப் பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். அவர்களோ ரம்யாவைச் சமாதானம் செய்து, கணவர் வீட்டுக்கே அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

தீ
தீ

இந்த நிலையில்,நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரம்யா திடீரென உடலில் தீப்பற்றியவாறு வலியால் அலறி துடித்தார். ரம்யாவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடலில் அளவுக்கு அதிகமான தீக்காயங்கள் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனது மகளின் கணவரும் மாமியாரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதாலேயே தீவைத்துக்கொண்டார் என ரம்யாவின் தந்தை மஞ்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவர் கவுதம்ராஜ், மாமியார் லதா ஆகியோர் ரம்யாவைக் கொடுமைப்படுத்தியதாலேயே மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என உறுதி செய்தனர். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரம்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது..

மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் பகிரும் ரம்யாவின் தந்தை, "எனக்கு ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணைக் கட்டிக் கொடுத்து குடும்பத்தோட கோவையில் இருக்காங்க. இது என்னோட ரெண்டாவது பொண்ணு. நல்லா பார்த்துப்போம்னு சொன்னாங்க. நம்பி கட்டிக் குடுத்தோம். கல்யாணம் ஆனதுல இருந்து மாமியாரும் கணவரும் அடிக்கடி சண்டை போட்டுருக்காங்க. ஒரு நாள்கூட என் பொண்ணை நிம்மதியா வாழ விடலை. எனக்கு ஒரு நாள் போன் பண்ணி இனி இந்த நரகத்துல என்னால வாழவே முடியாதுன்னு சொன்னா. கொடுமை தாங்க முடியாம மண்ணெண்ணெய ஊத்திப் பத்தவெச்சுக்கிட்டா. கடைசில என் பொண்ணு வாழ்க்கைய இப்படி ஆக்கிட்டாங்க" எனக் கண்ணீர் வடித்தார்.