Published:Updated:

`வேலைபார்த்த இடத்தில் ஒரு திருமணம்; சொந்த ஊரில் ஒரு திருமணம்!' - புதுக்கோட்டை இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞர்
கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞர்

புதுக்கோட்டை அருகே சேந்தன்குடியில் 7 வருடங்களுக்கு முன்பு நடந்த முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சேந்தன்குடியைச் சேர்ந்தவர் சிவநேசன்(36) எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிறுவன துணை மேலாளராகக் கடந்த 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். பெற்றோர்கள் சிவநேசனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தபோது, முதலில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார். அதன்பின்பு, உடனே தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்களைத் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், சேந்தங்குடி அருகே குலமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சிவநேசனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞர்
கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞர்

திருமணத்திற்குப் பிறகு மனைவியை ஈரோடு கூட்டிச் சென்று அங்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில், சிவநேசன் தினமும் நள்ளிரவில் வீட்டிற்கு வருவது, மனைவியை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. சிவநேசனின் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் இதுபற்றி அவரது மனைவி கேட்டபோது, சிவநேசனுக்கு அலுவலகத்திற்கு அருகே உள்ள மற்றொரு வீட்டிற்குச் சென்று வருவார் என்று கூறியுள்ளார். உடனே அவரது மனைவி அந்த முகவரிக்குச் சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள்ளே தங்கமணி என்ற பெண்ணும் 5 வயதுப் பெண் குழந்தையும் இருந்துள்ளனர்.

` இரண்டாவது கணவனையும் விட்டுவிட்டு வா!' -தாயின் 3-வது திருமண ஆசையால் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

அந்தப் பெண்ணைத்தான் சிவநேசன் முதல் திருமணம் செய்துள்ளார். உடனே, இதுகுறித்து அவரது மனைவி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து, சிவநேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸார் விசாரணையில்,``ஈரோட்டுக்குப் பணிபுரியச் சென்றபோது, தங்கமணி என்ற பெண்ணை முதல் திருமணம் செய்துள்ளார். 7 ஆண்டுகள் வரையிலும் சொந்த ஊரில் பலருக்கும் தெரியாமலே மறைத்து அங்கேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஆலங்குடி காவல்நிலையம்
ஆலங்குடி காவல்நிலையம்

இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்து அந்த ஊரிலேயே இரண்டு குடும்பத்தையும் அருகருகே வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். வீட்டில் பெற்றோரின் நிர்பந்தத்தால்தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சிவநேசனின் முதல் மனைவியும் தங்கமணி தங்களின் முதல் திருமணம் இருவீட்டாருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். இதனால், இரண்டு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு