Published:Updated:

`உன் தம்பி செத்துப் போயிட்டார்'னு சொன்னாள்! -தடம் மாறிய வாழ்க்கையால் நேர்ந்த துயரம்

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

என் மகன் சுரேஷ் திருமணம் செய்யாமல் ரோஸி என்ற பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் காதலித்த தகவல் எங்களுக்குத் தெரியவந்தது.

காதல்

சென்னை பூந்தமல்லி, பாரிவாக்கம் சத்திரம், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த மல்லிகா (50) என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `நான் மேற்படி விலாசத்தில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் தங்கராசு என்பவருடன் திருமணம் நடந்தது. எனக்கு 35 வயதில் மகளும் 30 வயதில் சுரேஷ் என்ற மகனும் உள்ளனர். என் கணவர் கொத்தனார் வேலை பார்த்துவந்தார். என் மகன் சுரேஷ் திருமணம் செய்யாமல் ரோஸி என்ற பெண்ணுடன் பழகி வந்தார். இருவரும் காதலித்த தகவல் எங்களுக்கு தெரியவந்தது.

சுஷாந்த் தற்கொலை... கரண் ஜோஹர், நெப்போட்டிஸம், ஸ்டார் வார்ஸ்தான் காரணிகளா?

ஆனால், அமைதியாக இருந்துவந்தோம். 2011-ம் ஆண்டு திரு.வி.க காவல் நிலையத்தில் என் மீதும் என் கணவர், என் மகன் ஆகியோர் மீதும் ரோஸி புகார் கொடுத்திருப்பதாகக் கூறி போலீஸார் எங்களிடம் விசாரித்தனர். விசாரணையின்போது ரோஸி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு என் மகன்தான் காரணம் என்றும் அதனால் என் மகனைத் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். அதற்கு நான் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் என் மகனுக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவள் ஒப்புக் கொள்ளாததால் எனக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எழுதி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அவளும் எழுதிக் கொடுத்துவிட்டு என் மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

அனிதாவுடன் பழக்கம்

2015-ம் ஆண்டு என் மகனுக்கும் ரோஸிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடந்தது. அதன்பிறகு அனிதா என்ற பெண்ணுடன் 2015-ம் ஆண்டு என் மகனுக்குப் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கொடுங்கையூரில் வாழ்ந்து வந்தனர். அனிதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவளுடைய கணவர் இறந்துவிட்டார்.

`கொரோனாவால் மாமா; அதிர்ச்சியில் அக்கா!’ - அடுத்தடுத்த மரணங்களால் சென்னைக் குடும்ப சோகம்

ஆதலால் என் மகன் அவளுடைய வீட்டில் இருந்துகொண்டு வேலைக்குச் சென்று வந்தான். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு என் மகன் வந்து செல்வான். கடந்த 14.6.2020-ம் மாலை சுமார் 6 மணியளவில் என் மகனுடைய செல்போனிலிருந்து எனக்கு போன்கால் வந்தது. அதில் பேசியவர், `சுரேஷ் அம்மாவா?' என்று கேட்டார். அதற்கு என் மகள், `நான் சுரேஷின் அக்கா' என்று கூறினாள். உடனே, உங்கள் தம்பி சுரேஷ் இறந்துவிட்டார். உடனே வரும்படி கூறினார்.

தற்கொலை

நாங்கள் உடனே இங்கு வந்து பார்த்தபோது என் மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் சொன்னார்கள். உடனே என் மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு என் மகன் இறந்துவிட்டதாக கூறினர். எனவே என் மகனின் இறப்பு குறித்து விசாரித்து அவனின் சடலத்தை நல்லடக்கம் செய்ய என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

Vikatan

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட சுரேஷின் அம்மா மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். சுரேஷ் தற்கொலை குறித்து அவருடன் வாழ்ந்து வந்த அனிதாவிடம் விசாரணை நடத்தியபோது ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுரேஷ் முடங்கியிருந்துள்ளார். மேலும் அவர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். அதனால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் தெரியவந்துள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு