Published:Updated:

`கொரோனா நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்தது யார்?' -சினிமா மோகத்தால் விபரீதத்தில் முடிந்த நட்பு

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

“என் ஃப்ரெண்டை நானே சாகடிச்சிட்டேனே... இனி அவன் இல்லாமல் எப்படி இருப்பேன். ரொம்ப நல்லவன் சார் அவன்’ என்று கூறி காவல் நிலையத்தில் கதறி அழுதிருக்கிறார் தினேஷ்பாபு.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் யுவராஜ், வயது 22. ஆட்டோ ஓட்டுநரான இவர், நடிகர் விஜய்-யின் தீவிர ரசிகர். அதேபகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம் என்பவரது மகன் தினேஷ்பாபு, வயது 22. ரஜினி ரசிகரான இவர், டி.வி மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது தனது தந்தையுடன் சமையல் வேலைகளுக்கும் சென்றுவருவார்.

உயிரிழந்த யுவராஜ்
உயிரிழந்த யுவராஜ்

பக்கத்து வீடுகள்தான் என்பதால், யுவராஜ்-தினேஷ் குமார் இருவரும் சிறுவயது முதல் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இருவரும் வேலைக்குச் செல்லவில்லை.

கள்ளச்சாராயம் காய்ச்சி `டிக் டாக்' வீடியோ! - தேனியில் சிக்கிய 4 இளைஞர்கள்

இந்நிலையில், நண்பர்கள் இருவரும் நேற்று மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கொரோனா குறித்து பேச்சு எழுந்ததால், “என் தலைவன் விஜய்தான் கொரோனா நிதியை அள்ளிக்கொடுத்திருக்காரு. ஆனால், உன் தலைவர் கொஞ்சமா கிள்ளித்தான் கொடுத்திருக்காரு” என்று கூறியிருக்கிறார் யுவராஜ்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியதால், இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஒருகட்டத்தில் யுவராஜை கீழே தள்ளிய தினேஷ்பாபு, அருகில் கிடந்த ஒரு கல்லால் தாக்கியிருக்கிறார். அது யுவராஜின் தலையில் பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

கைது செய்யப்பட்ட தினேஷ்குமார்
கைது செய்யப்பட்ட தினேஷ்குமார்

தகவல் அறிந்து அங்கு விரைந்த மரக்காணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீஸார், யுவராஜை புதுச்சேரி காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். ஆனால் யுவராஜைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறியதால், அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதிருக்கின்றனர்.

அதையடுத்து, தினேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அப்போது, “என் ஃப்ரெண்டை நானே சாகடிச்சிட்டேனே... இனி அவன் இல்லாமல் எப்படி இருப்பேன். ரொம்ப நல்லவன் சார் அவன்’ என்று கூறி காவல் நிலையத்தில் கதறி அழுதிருக்கிறார், தினேஷ்பாபு.

`649 லிட்டர் கள்ளச்சாராயம்; வழக்கில் சிக்கிய 138 பேர்!' - அதிர்ச்சி கொடுத்த நீலகிரி நிலவரம்
அடுத்த கட்டுரைக்கு