Published:Updated:

பாஸ் போடுங்க... 500 ரூபாய் எடுத்துக்கோங்க: 12-ம் வகுப்பு மாணவனின் செயலுக்கு அதிகாரிகள் செய்தது என்ன?

Exam (Representational Image)

12-ம் வகுப்பு மாணவன் ஒருவன், தன்னை வேதியியல் பாடத்தில் தேர்ச்சி செய்ய வைக்குமாறு, தன்னுடைய வினாத் தாளில் 500 ரூபாய் நோட்டை பசை கொண்டு ஒட்டியுள்ளான். மாணவனின் வினாத்தாளைத் திருத்திய ஆசிரியர், இந்த விஷயத்தைத் தேர்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

பாஸ் போடுங்க... 500 ரூபாய் எடுத்துக்கோங்க: 12-ம் வகுப்பு மாணவனின் செயலுக்கு அதிகாரிகள் செய்தது என்ன?

12-ம் வகுப்பு மாணவன் ஒருவன், தன்னை வேதியியல் பாடத்தில் தேர்ச்சி செய்ய வைக்குமாறு, தன்னுடைய வினாத் தாளில் 500 ரூபாய் நோட்டை பசை கொண்டு ஒட்டியுள்ளான். மாணவனின் வினாத்தாளைத் திருத்திய ஆசிரியர், இந்த விஷயத்தைத் தேர்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
Exam (Representational Image)

`பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் தேர்வு எழுதும் காட்சியில் `பாஸ் போட்டுடு இல்ல கொன்னுடுவேன்’ என வினாத்தாளில் அரிவாளை வரைந்துவிட்டு வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்று இடம்பெறும். அதேபோல தனது தேர்வுத்தாளில் தன்னை பாஸ் செய்ய வைக்குமாறு மாணவன் 500 ரூபாய் பணத்தை வைத்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

Exam (Representational Image)
Exam (Representational Image)
Photo by Andy Barbour from Pexels

குஜராத்தில் 12-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னை வேதியியல் பாடத்தில் தேர்ச்சி செய்ய வைக்குமாறு, தன்னுடைய வினாத் தாளில் 500 ரூபாய் நோட்டை பசை கொண்டு ஒட்டியுள்ளான். மாணவனின் வினாத்தாளைத் திருத்திய ஆசிரியர், இந்த விஷயத்தைத் தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து, ஆசிரியருக்கு லஞ்சம் தர முயன்ற குற்றத்துக்காக, மாணவனின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதோடு, ஒரு வருடத்துக்கு தேர்வு எழுதுவதற்கு அம்மாணவனுக்குத் தடை விதித்துள்ளது, குஜராத் இடைநிலை மற்றும் உயர்நிலை கல்வி வாரியம்.

500 Rupee
500 Rupee

இது குறித்து வாரியத்தின் அதிகாரிகள் தெரிவிக்கையில், `தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இது போன்ற தந்திரங்கள் வேலை செய்யக்கூடும் என யாராவது அந்த மாணவனிடம் சொல்லி இருக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் தேர்வில் பார்த்து எழுதியது, வினாத்தாளில் சிவப்பு மையால் ஏதாவது எழுதியது போன்ற வெவ்வேறு ஒழுங்குமுறை மீறல் காரணங்களுக்காக, ஒரு வருடம் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்பட்ட 22 மாணவர்களில் இந்த மாணவனும் ஒருவன்’ எனத் தெரிவித்துள்ளனர்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.