Published:Updated:

``அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலை... தீர்வுகளைப் பேச மறுக்கிறோமா?”

``அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலை... தீர்வுகளைப் பேச மறுக்கிறோமா?”
``அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலை... தீர்வுகளைப் பேச மறுக்கிறோமா?”

"மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்குச் சட்டத்தை இயற்றுவதோடு மட்டும் நிற்காமல், அரசாங்கங்கள் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். வெமூலாவுக்காக அத்தனை கோஷம் எழுப்பினோம், ஆனால், சட்டரீதியாக அதுபோன்ற மரணங்களைத் தடுக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது? அப்படி எடுக்கப்பட்டிருந்தால் பாயலின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்குமே!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மூகத்துடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் மாணவர்களிடையே குறைந்துகொண்டிருக்கின்றன. இதற்கான காரணங்களில் ஒன்றாகச் சமூக அழுத்தங்களைச் சொல்லலாம். அண்மையில் நிகழ்ந்த இரண்டு மாணவர்களின் தற்கொலைகள் அதற்குச் சாட்சியமாக உள்ளன. கடந்த (மே) 17-ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ரிஷி ஜோஸ்வா கல்லூரி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்ற அவர், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ்தரப்பு சொல்கிறது. தேர்வு ஒன்றை எழுதத் தவறியதால் மன அழுத்தத்தில் இருந்ததாக, அவரின் நண்பர்கள் கூறுகின்றனர் தற்கொலைக்கு முன் தன்னுடைய பேராசிரியர் ஒருவருக்கு அந்த மாணவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவதாக மே 22-ம் தேதி அன்று மும்பை டோபிவாலா தேசிய மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரியில் பயின்ற பாயல் தத்வி என்ற மாணவி, தன் சீனியர் மாணவிகள் மூன்று பேரால் சாதியைக் குறிப்பிட்டு தொல்லை கொடுக்கப்பட்டதால், துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். `கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோதே சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிகழ்வு நடந்து இருக்காது' என்று அந்த மாணவியின் பெற்றோர் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

``அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலை... தீர்வுகளைப் பேச மறுக்கிறோமா?”

மே 26-ம் தேதி சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவி அனு பிரியா, எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இவர் பி.டெக்  உயிரி மருத்துவப் பொறியியல் பயின்று வந்தார். தேர்வுகள் முடிந்து தன் அம்மா தம்பியுடன் வீடு திரும்பும் எண்ணத்திலிருந்தவர் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன? ``என் வீட்டில் பிடித்ததைச் செய்ய எனக்கு உரிமை இல்லை. சுதந்திரமில்லாமல் எதற்கு வாழ வேண்டும்?” என்று தன் தம்பிக்குக் கடிதம் எழுதியது போன்று மரண வாக்குமூலம் ஒன்றை எழுதிவிட்டு உயிரை விட்டிருக்கிறார். 

இதுபோன்ற மாணவர்களின் தொடர்ச்சியான மரணங்கள் நிச்சயம் இந்திய எதிர்காலத்துக்கு ஆரோக்கியமான அறிகுறி இல்லை. இதுகுறித்து சிறார்களுக்கான செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், ``மாணவர்கள் தற்கொலை செய்வதற்குக் காரணம், பெற்றோர், கல்விக்கூடம், அரசாங்கம் என அவர்களின் சூழல்தான். பெற்றோர்களிடம் காணப்படும் தவறான மனநிலை என்னவென்றால் தங்கள் பிள்ளைகளை அவர்கள் முதலீடுகளாகவே பார்க்கின்றனர். தன் பிள்ளைகள் என்ஜினீயர் மற்றும் டாக்டர் படித்து நல்ல வருமானம் தரும் பதவியில் அமரவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நல்ல மனிதனாக வரவேண்டும், பிள்ளைகளின் தனித்தன்மைகளை

``அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவர்கள் தற்கொலை... தீர்வுகளைப் பேச மறுக்கிறோமா?”

வெளிக்கொண்டுவர வேண்டும், அதற்காக தங்கள் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி, நேர்காணலில் எப்படித் தேர்வு பெறுவது என்பது பற்றிக் கூறுகிறார்களே தவிர, வெளிச் சூழலில் தங்களின் பிள்ளைகள் வரும்போது எப்படிக் கையாள வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதில்லை.

தொடக்கக் கல்வியின்போதே தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் கற்றுக் கொடுத்திருந்தால், இந்த மாணவர்கள், தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான நல்லுறவு இப்போது பல்வேறு கல்வி நிறுவனங்களில் இல்லாததும் தற்கொலைகளுக்கு ஒரு காரணம். ஆசிரியர்கள் கற்பிப்பவர்களாக மட்டும் இல்லாமல் வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அடைக்கப்பட்ட பிராய்லர் கோழிகள் போல் இல்லாமல் தனது உணவைத் தானே தேடிக்கொள்ளும் நாட்டுக் கோழிகள் போன்றும், பிரச்னைகளை எதிர்த்துச் சண்டையிடும் கழுகு போலவும் மாணவர்களை உருவாக்க, பெற்றோர்களும் ஆசிரியர்களும் நினைத்தாலே தற்கொலைகள் இல்லாமல் போகும்.

மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்குச் சட்டத்தை இயற்றுவதோடு மட்டும் நிற்காமல், அரசாங்கங்கள் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். வெமூலாவுக்காக அத்தனை கோஷம் எழுப்பினோம், ஆனால், சட்டரீதியாக அதுபோன்ற மரணங்களைத் தடுக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது? அப்படி எடுக்கப்பட்டிருந்தால் பாயலின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்குமே! பகடிவதை (Ragging) தடைச் சட்டத்தை அரசு கொண்டுவந்தது.  ஆனால், கல்லூரிகளில் 'ராகிங்' இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக அதிகளவு தற்கொலைகள் நடக்கின்றன. இதற்கு எல்லாம் தீர்வு, தொடக்கத்திலிருந்தே மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமல்லாமல் சமூகத்தோடும், சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும்  நடந்து கொள்ளும் பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றோர்களின் பங்கும் அதில் அவசியம். அதற்கான திட்டமிடல்கள் வேண்டும்” என்கிறார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு