Published:Updated:

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 9 புதிய பாடங்கள்... சுமையா, பலமா?

பொறியியல்

இதே அண்ணா பல்கலைக்கழகம்தான் தத்துவ நூல் என்கிற அடிப்படையில் பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்தார்கள். கீதை தத்துவ நூலா? என்கிற விவாதங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பார்த்தால் பொறியியல் படிக்கக்கூடிய மாணவனுக்கு கீதை எதற்கு?

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 9 புதிய பாடங்கள்... சுமையா, பலமா?

இதே அண்ணா பல்கலைக்கழகம்தான் தத்துவ நூல் என்கிற அடிப்படையில் பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்தார்கள். கீதை தத்துவ நூலா? என்கிற விவாதங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பார்த்தால் பொறியியல் படிக்கக்கூடிய மாணவனுக்கு கீதை எதற்கு?

Published:Updated:
பொறியியல்

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கென 9 பாடங்களை அறிமுகம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். பெண்கள் மற்றும் பொது ஆய்வுகள் அறிமுகம், இலக்கியத்தின் கூறுகள், திரைப்பட மதிப்பிடல், பேரிடர் மேலாண்மை, யோகா - ஆயுர்வேதம் - சித்தா, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு, இந்தியாவில் மாநில தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல், தொழில்முறை பாதுகாப்பு, மனித சமூகத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை என பொறியியல் படிப்புக்கு அப்பாற்பட்ட துறைகள் சார்ந்த இந்த 9 பாடங்களில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான 2 பாடங்களைத் தேர்ந்தெடுத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எப்படிப் பார்க்கலாம் என சென்னையைச் சேர்ந்த உயர் கல்வித்துறை செயற்பாட்டாளர் கருணானந்தத்திடம் கேட்டோம்...

கருணானந்தம்
கருணானந்தம்

``புதிய கல்வித்திட்டத்தை அடியொற்றியே இப்படியான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது என நினைக்கிறேன். அனைத்துத் துறை சார்ந்தும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கிறது. இதன் அடிப்படையில் வேறு துறைகள் சார்ந்த பாடத்தை மாணவர்களே தேர்ந்தெடுத்து எழுதலாம். சரியான திட்டம்தானே, பிற துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்வதில் என்ன தவறு என்றுகூட நீங்கள் கேட்கலாம். ஆனால், அது ஒரு வகையில் பொறியியல் படிப்பை நீர்த்துப்போகச் செய்துவிடும் அபாயமும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாம் எந்தத் துறை சார்ந்து படிக்கிறோமோ அத்துறையில் நிபுணத்துவத்தை அடைவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். பொறியியல் படிப்பை எடுத்துக்கொண்டால், அனைத்துப் பிரிவுகளுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியல் சார்ந்த பாடங்கள் இடம்பெற்றிருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் துறை சார்ந்த பாடங்களே இருக்கும். முதல் இரண்டு ஆண்டுகளில் கற்பிக்கப்படும் அடிப்படை அறிவியல் அவர்கள் துறை சார்ந்து நிபுணத்துவம் பெற உதவியாக இருக்கும். எனவே, பொறியியல் துறையில் கூடுதல் நிபுணத்துவம், நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்து எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது ஏற்புடையது.

 தேர்வு
தேர்வு

துறைக்கு வெளியே இரண்டு பாடங்களுக்குத் தேர்வெழுத வேண்டும் என்பது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாகவே இருக்கும். பொறியியல் படிப்பின் மீதான கவனக்குவிப்பை சிதைப்பதாக அமைந்துவிடும். இதே அண்ணா பல்கலைக்கழகம்தான் தத்துவ நூல் என்கிற அடிப்படையில் பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்தார்கள். கீதை தத்துவ நூலா என்கிற விவாதங்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டுப் பார்த்தால் பொறியியல் படிக்கக்கூடிய மாணவனுக்கு கீதை எதற்கு? பொறியியல் துறை சார்ந்து இன்னின்ன பாடங்கள்தான் இருக்கும் என்று படிக்க வந்திருக்கும் மாணவர்களை இது போன்ற அறிவிப்புகள் மூலம் குழப்பக் கூடாது. அத்துறை சார்ந்து அவர்களை வளர்த்தெடுக்க மட்டும் யோசிக்க வேண்டும்" என்கிறார் கருணானந்தம்.