Published:Updated:

`பேசிக்கிட்டே இருந்தா எதுவும் நடக்காது, அதிரடி காட்டணும்!' - சமுத்திரக்கனி

``மாணவர்கள் மத்தியில் தற்போது சாதி உணர்வு வளரத் தொடங்கியிருக்கிறது. கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கையில் கலர் கயிறு கட்டி திரிகின்றனர்.''

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் சமுத்திரக்கனி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "புதிய கல்விக் கொள்கை தொடர்பான சூர்யாவின் கருத்து வரவேற்கத்தக்கது. அவருடைய குரல் கிராமப்புற மாணவர்களுக்கானது. புதிய கல்விக் கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது. அந்த வருத்தம் குறித்த விவாதத்தை நடிகர் சூர்யா தொடங்கி வைத்திருக்கிறார். அனைவரும் இதைப் பற்றிப் பேசித் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்கள் மத்தியில் தற்போது சாதி உணர்வு வளரத் தொடங்கியிருக்கிறது.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கையில் கலர் கயிறுகட்டித் திரிகின்றனர். இந்த ஆபத்தான போக்கு கல்லூரிகளிலிருந்து பள்ளிகளிலும் புகுந்துவிட்டது. சாதியைத் தள்ளி வைத்துவிட்டு பயணப்பட்டால் மட்டுமே மனிதராக முடியும்'' என்றவரிடம், சென்னையில் ரவுடிஸம் செய்யும் கல்லூரி மாணவர்களின் கை உடைக்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு,

"தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே தவறுகளைத் தடுக்க முடியும். பேசிக்கிட்டே இருந்தால் இங்கே எதுவும் நடக்காது. அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். செத்துவிடுவேன் என்ற பயம் இருந்தால்தான் பாலியல் தவறுகளைச் செய்ய மாட்டார்கள். அதுபோல சில விவகாரங்களில் பயம் கொடுப்பதில் தவறு கிடையாது" என்றார்.