Published:Updated:

`புற்றுநோய் மருத்துவராவதுதான் லட்சியம்!' - நீட் தேர்வில் சாதித்த பழங்குடியின மாணவி

ராம் பிரசாத்

டெல்லியில் பழங்குடியின மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Shashi
Shashi ( @AdvRajendraPal )

டெல்லியைச் சேர்ந்த சாஷி மாநில அரசின் உதவியுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் சாஷி. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர்தான் இவரது பூர்வீகம். 25 வருடங்களுக்கு முன்பு இவரது குடும்பம் பிழைப்பை தேடி டெல்லிக்கு வந்துவிட்டனர். சாஷி பெற்றோர்கள் கூலிவேலை செய்து இவரைப் படிக்க வைத்துள்ளனர். அரசு பள்ளியில் படித்து வந்தவர் 2017-ல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். மருத்துவக் கனவோடு நீட் தேர்வை எதிர்கொண்டார். வெற்றி அவ்வளவு எளிதில் வசப்படவில்லை. மாநில அரசின் உதவியுடன் தனியார் கோச்சிங் சென்டரில் பயின்று தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Shashi
Shashi
@AdvRajendraPal

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து சாஷி பேசுகையில், ``2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்காக தயாரானேன். என்னால் தேர்ச்சியடைய முடியவில்லை. அந்தத் தோல்வி எனக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் நேர மேலாண்மை மற்றும் தேவையற்ற கேள்விகளைக் கையாள்வதில் சிறந்தவர்களாக இருந்தனர். எனக்கு புற்றுநோய் மருத்துவராக வேண்டும். என்னால் எனது குடும்பத்தினர் மற்றும் சமூகம் பெருமைகொள்ள வேண்டும்'' என்றார்.

`சவால்களை எதிர்கொண்டால்தான் வெற்றி!’ - காஷ்மீர் எல்லையில் இருந்து எய்ம்ஸுக்குத் தேர்வான முதல் மாணவி

சாஷியின் தந்தை அகிலேஷ் கவுர் பேசுகையில், ``எனது மகளின் மருத்துவக் கனவை நனவாக்க எங்களிடம் போதிய வசதிகள் இல்லை. கோச்சிங் சென்டரில் சேர்த்து படிக்க வைக்க ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எங்கள் சேமிப்பை கரைத்துச் சென்றது” என்றார். தந்தையின் வருமானத்தில் சாஷியின் குடும்பம் இயங்கி வருகிறது. 6 பேர் கொண்ட குடும்பம் அவர் ஒருவரின் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளது.

Delhi CM Arvind Kejriwal
Delhi CM Arvind Kejriwal

முதல் தோல்வி அவரை கடுமையாக பாதித்துள்ளது. கோச்சிங் பெறாமல் தன்னால் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு வந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு செலவில் தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டது. சாஷியுடன் 107 பழங்குடி மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வானார்கள். மருத்துவம், பொறியியல், வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு அரசு மூலம் இலவசாக இந்தத் திட்டத்தின் கீழ் படிக்கலாம். புத்தகம் வாங்குவதற்கு ரூ.10,000 அரசால் வழங்கப்படுகிறது. இந்தத்திட்டத்தின் கீழ் மருத்துவப் படிப்புக்கு தேர்வான முதல் மாணவி சாஷி என அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கூறியுள்ளார்.

` 30 ஆண்டுகளாக அதே சீரியல் நம்பர்!' -  60 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற லாட்டரி மேன்