Published:Updated:

`பகவத் கீதை கட்டாயப் பாடமல்ல; விருப்பப் பாடம்தான்! - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

இந்த அறிவிப்பின்படி பொறியியல் படிக்கும் மாணவர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்தத் துறையின் பாடத்திட்டத்தின் மூன்றாவது பருவத்தில் ஆறாவது பாடமாக தத்துவவியல் சேர்க்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

கிண்டி உள்ள அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி, சி.இ.ஜி உள்ளிட்ட வளாகங்களிலுள்ள பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலின்பேரில், பொறியியல் படிப்பின் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்த அறிவிப்பின்படி பொறியியல் படிக்கும் மாணவர்கள் எந்தத் துறையைத் தேர்தெடுத்தாலும் அந்தத் துறையின் பாடத்திட்டத்தின் மூன்றாவது பருவத்தில் ஆறாவது பாடமாக தத்துவவியல் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பகவத் கீதை கற்றுத்தர வேண்டும் எனப் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் கல்வி வளாகத்தில் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.

இந்தச் செய்தி குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

``இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அதிக பாடங்களைப் படித்து வருகிறார்கள். எனவே, அவர்களுக்குக் கூடுதல் சுமையைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, சம்ஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்" என விளக்கம் கொடுத்துள்ளார் சூரப்பா.