Published:Updated:

``மொபைலைவிட்டு வெளியே வாங்க; நாட்டுக்குத் தொண்டு செய்யுங்க!" - மாணவர்களுக்கு அரியலூர் எஸ்.பி அட்வைஸ்

அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா

`மாணவர்கள் தங்களின் பொழுதுபோக்கு நேரத்தை வீணடிக்காமல், இது போன்ற சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டிவந்தால் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும்.' - எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா.

``மொபைலைவிட்டு வெளியே வாங்க; நாட்டுக்குத் தொண்டு செய்யுங்க!" - மாணவர்களுக்கு அரியலூர் எஸ்.பி அட்வைஸ்

`மாணவர்கள் தங்களின் பொழுதுபோக்கு நேரத்தை வீணடிக்காமல், இது போன்ற சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டிவந்தால் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும்.' - எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா.

Published:Updated:
அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா

மாணவர்கள் சமூகநலனில் நாட்டம்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ் எனப்படும் நாட்டு நலப்பணி இயக்கங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

இதன் மூலம், ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ மாணவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று குளம், குட்டைகளைத் தூர்வாருதல், மரம் வளர்த்தல், சுற்றுச்சூழல் குறித்து கிராம மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.

அரியலூர்
அரியலூர்

அந்த வகையில், அரியலூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தொண்டு செய்துவந்திருக்கிறார்கள். அவர்களின் செயலை ஊக்குவிக்கும்விதமாக அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் தலைமையில் நடந்த நிறைவுவிழாவில் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ``மாணவர்கள் தங்களின் பொழுதுபோக்கு நேரத்தை வீணடிக்காமல், இது போன்ற சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டிவந்தால் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும். சில மாணவர்கள் தாங்கள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தை, கைப்பேசியில் உள்ள இணையதளங்களைப் பார்ப்பதிலேயே கழிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படுவது இல்லை. மாறாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களின் வாழ்க்கைப் பாதை திசைமாறி, எதிர்காலமே வீணாகும் சூழலும் உருவாகிறது. எனவே, மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்க அறிவுச் செல்வத்தைத் தேடிச் செல்வதிலும், கல்வி கற்பதிலும் மட்டும் ஆர்வம் காட்டி, இந்த வயதில் அதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் அரியலூர் எஸ்.பி
மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் அரியலூர் எஸ்.பி

நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயல வேண்டும். காரணம், பெற்றோர்கள் மட்டுமல்ல, இந்த நாடும், நாட்டின் எதிர்காலமும் உங்களைச் சார்ந்தே உள்ளது என்பதை அடிக்கடி நினைவுகூருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செல்போன்
செல்போன்

நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்யும் தொண்டாகும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல, ‘நாம் செய்யும் சிறு சிறு தொண்டுகளும் பெருந்தொண்டாக மாறி நாட்டை வளப்படுத்தும்’ என்பதை நினைவில்கொண்டு ஒவ்வொரு நாளும் மாணவர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism