Published:Updated:

`பழங்குடி மாணவருக்கு இரண்டு வாரத்துக்குள் சீட்!' - மனித உரிமை ஆணையம் பரிந்துரை

ஐஷ்வர்யா

மனித உரிமை ஆணையத்தின் திறந்தவெளி விசாரணை சென்னையில் நடைபெற்றது.

மாணவர் சந்திரன்
மாணவர் சந்திரன்

ஈரோட்டிலிருந்து அந்தியூர் செல்லும் சாலையில் 60 கிலோமீட்டர் பயணத் தொலைவில் இருக்கிறது, கொங்காடை என்னும் மலைக்கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சோளகர் பழங்குடி மாணவர் சந்திரன், பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தும் அவருக்கான உயர்கல்வி வாய்ப்பை தமிழக கால்நடை மற்றும் வேளாண் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் மறுத்தன.

"அரசு மனசுவச்சா அந்தக் கிராமத்துக்கே முதல் பட்டதாரி இவர்தான்!" - பழங்குடி மாணவருக்காக எழும் குரல்கள்

இது குறித்து அண்மையில் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். வேளாண்மை தொழிற்பாடத்தை தேர்வு செய்து படித்த சந்திரன் 600 மதிப்பெண்களுக்கு 444 மதிப்பெண் பெற்றிருந்தும் அவருக்கான சீட் மறுக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கியிருந்தால் அவரது கிராமத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி சந்திரன்தான். இந்த நிலையில் மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மனித உரிமை ஆணையத்தில்
மனித உரிமை ஆணையத்தில்

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான மனித உரிமை ஆணையத்தின் திறந்தவெளி விசாரணை சென்னையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பழங்குடி மாணவர் சந்திரனுக்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டு வாரத்துக்குள் சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆணைய விசாரணைக்கு ஆஜரான மாணவரின் தரப்பிலிருந்து பேசிய சுடரொளி அமைப்பின் நடராஜன்,``கால்நடைப் பல்கலைக்கழகத்திலிருந்து அதன் பதிவாளர் விசாரணைக்கு வந்திருந்தார். தொழிற்பாடத்துக்கான இடஒதுக்கீடு 18 சதவிகிதம் என்னும் நிலையில் அதனைச் சட்டப்படி ஒரு சீட்டாகக் கருதி எங்களால் சீட்டு தரமுடியவில்லை என்பதுதான் இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்று சொன்னார்கள்.

`இப்போ 2 புத்தகம் எழுதியாச்சு; 2 ஆப் உருவாக்கியாச்சு!' - சாதிக்கும் சிவகாசி பள்ளி மாணவர்

இருந்தும், இந்த விவகாரம் தொடர்பாக பரிசீலனை செய்து மாணவர் சந்திரனுக்குச் சீட்டு வழங்குமாறு மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது” என்றார்.