Published:Updated:

"நோட்டு வாங்கணும்னா, 3 நாள் முன்னாடியே அப்பாகிட்ட சொன்னாதான் கிடைக்கும்" - ஒரு விடியலின் கதை

கல்வி

குடும்பம் குடும்பமாகச் சூளைகளிலும் ஆலைகளிலும் சிக்கி இன்னல்களுக்கு இரையாகி பின் வெளியேறிய கொத்தடிமை தொழிலாளர்களின் மக்கள், சமூகத்தின் அடுத்த நிலைக்கு உயர்த்தப்படும் ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இந்தத் தேர்ச்சி பார்க்கப்படுகிறது.

"நோட்டு வாங்கணும்னா, 3 நாள் முன்னாடியே அப்பாகிட்ட சொன்னாதான் கிடைக்கும்" - ஒரு விடியலின் கதை

குடும்பம் குடும்பமாகச் சூளைகளிலும் ஆலைகளிலும் சிக்கி இன்னல்களுக்கு இரையாகி பின் வெளியேறிய கொத்தடிமை தொழிலாளர்களின் மக்கள், சமூகத்தின் அடுத்த நிலைக்கு உயர்த்தப்படும் ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இந்தத் தேர்ச்சி பார்க்கப்படுகிறது.

Published:Updated:
கல்வி

சுரண்டும் வர்க்கம் இருக்கும்வரை சுரண்டப்படும் வர்க்கமும் நிலைப்பெறத் தான் செய்கிறது. சாதி, மதம், இனம், மொழி என சமூகத்தில் விதைக்கப்பட்டு இருக்கும் எந்த ஒரு அமைப்பை எடுத்துக் கொண்டாலும் அதன் கீழ் வர்க்க ரீதியான படிநிலைகள் தன்னிச்சையாக உருவாகித் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட படிநிலைகளில் கொடூரமான பழக்கங்களை மேற்கொண்டு வந்ததுதான் முதலாளி-தொழிலாளி வர்க்கப் படிநிலை. இது கடனாளி-கடன் என்ற ஒப்பந்தத்திலிருந்து உருவான தொழிலாளர் அமைப்பையும் வரையறுக்கிறது. கடன் வழங்குபவர் கடனாளியுடன் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ ஒப்பந்தம் செய்துகொண்டு, அவரது உழைப்புக்கு ஈடாக அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் உழைப்புக்கு ஈடாகக் கடன் தொகையைப் பெறும் கட்டாய உழைப்பின் ஒரு வடிவமாக அடையாளப்படுத்தப்படுவதே “கொத்தடிமை” தொழில். அதிகப்படியான வேலை நேரத்திற்கு மிகவும் குறைவான வாரக்கூலியையே இவர்கள் பெறுவர்.

கொத்தடிமை
கொத்தடிமை
பகலிலும் இருளையே சந்தித்து வந்த ஒரு கடினமான வாழ்வை எதிர்கொண்ட இத்தொழிலாளர்களின் அதிகபட்ச ஆசை தங்கள் பிள்ளைகளை இவ்விருளிலிருந்து ஒளியின் பக்கம் நகர்த்த வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அப்படி ஒளியைச் சந்தித்த முதல் தலைமுறையென பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் இத்தொழிலாளர்களின் பிள்ளைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

10, +2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கொத்தடிமைகளாக இருந்து பின் அரசால் மீட்கப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் சிலரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

“நோட்டு புக்கு கைடுகள் வாங்கணும்னா, ஒரு மூனு நாள் முன்னாடியே அப்பா கிட்ட சொன்னாதான், பணம் சேர்த்துவச்சி வாங்கித் தருவாரு, சில சமயம் நண்பர்கள் கிட்டயிருந்து கைடு கடன் வாங்கி நோட் புக்ல எழுதி வச்சிப் படிச்சதும் உண்டு. இப்படிச் செய்தால் படிக்கும்போது இரண்டு முறை மனதில பதியும்படி இருக்கும்” என்று தனது தேர்வுக்கான தயாரிப்பை விவரிக்கிறார் ஒரு மாணவி.

பிளஸ் 2 தேர்வு
பிளஸ் 2 தேர்வு

பெரும்பாலான மாணவிகள் தாங்கள் டாக்டர் ஆக வேண்டும் என்று தங்கள் எதிர்கால கனவைப் பகிர்ந்த இடத்தில் ஒரு மாணவன், “எங்க அப்பா நான் போலீஸ் ஆகணும் அப்படின்னு ஆசைப்படுறாரு, என் ஆசையும் அதுதான், போலீஸ் ஆகி என்னால முடிஞ்ச அளவு தவறுகளைத் தட்டிக் கேட்டு, நாட்டுக்கு சேவை செய்வேன்” என்கிறார்.

குடும்ப வருமானம் போதாத நிலை, மருத்துவச் செலவுகள், ஒற்றைப் பெற்றோர் குடும்பம் எனப் பல காரணங்களால் குடும்பம் குடும்பமாகச் சூளைகளிலும் ஆலைகளிலும் சிக்கி இன்னல்களுக்கு இரையாகி பின் வெளியேறிய கொத்தடிமை தொழிலாளர்களின் மக்கள், சமூகத்தின் அடுத்த நிலைக்கு உயர்த்தப்படும் ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இந்தத் தேர்ச்சி பார்க்கப்படுகிறது.

பிள்ளைகளைப் பள்ளிக்கு கூட்டிச்செல்ல நேரம் போதாமல் இருந்ததாலேயே அவர்கள் ஆரம்ப காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோருடன் வேலை பார்த்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. அதைப்பற்றி ஒரு மாணவி பகிர்ந்த போது, “அப்பா அம்மா காலையில கல்லறுத்து போட்டாங்கன்னா, மதியானம் அந்தக் கல்லுங்க காய்ந்ததும் அதத் திருப்பிப் போடுற வேலைகளை நாங்கதான் செய்வோம், குழந்தையாய் இருந்ததுனால அந்த வேலையோட சிரமத்தைப் பத்தி பெரிசா உணர்ந்துக்க முடியல” என்று கூறினார்.

இவர்கள் அனைவரும் தங்கள் கதைகளைப் பகிரக் கேட்கும்போது ஒவ்வொருவரின் கதையிலும் ஒவ்வொரு விதமான இணைப்பு இருப்பதை உணரமுடிகிறது. கொத்தடிமைகளாக இருந்தபோது அவ்விணைப்பு, முதலாளிகளின் கட்டளைக்குப் பணிந்து பயந்து ஒடுங்கி வாழ்வதாய் இருந்திருக்கிறது, ஆனால் தற்போது அவ்விணைப்பானது பிள்ளைகளின் மூலமும் அவர்களின் வாழ்க்கையின் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பொறுத்தும் அமைந்திருக்கிறது.

உயர்கல்வி
உயர்கல்வி

மேலும் இவர்களை மீட்டெடுத்து வெளிக்கொண்டுவரும் நிலை வரை அரசாங்கம் உதவிபுரிய இவர்கள் இவர்களுக்கென உருவாக்கிக் கொண்ட அமைப்புதான் ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் நல்வாழ்வு சங்கம்' (RBLA- Released Bonded Laborer's Association). இந்த அமைப்பின் மூலம் இவர்கள் தங்கள் சமூகத்தாருக்குத் தேவையான ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற அத்தியாவசியங்களைப் பெற்றுத் தருவது, இவர்களைப் போலக் கொத்தடிமைகளாக தற்காலத்தில் வாழ்ந்துவரும் மக்களை மீட்டெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் சிறுவயது முதலே பெற்றோர்கள் படும் துன்பங்களைக் கண்ணெதிரே பார்த்து வளர்ந்த அப்பிள்ளைகள் தங்கள் அனுபவங்களைப் பகிரும்போது, பட்ட துயரங்களை எண்ணி ஒரு பக்கம் மனம் வருத்தமுற்றாலும் இன்று அவர்கள் எதிர்கொள்ளப்போகும் புதிய பாதையை எண்ணி மனம் ஒரு வித நிறைவைப் பெறுகிறது.