Published:Updated:

`நமக்கான அடையாளத்தை உருவாக்குவோம்' - நம்பிக்கை தந்த போட்டித் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!

போட்டித் தேர்வுகளுக்கான  ஆலோசனை முகாம்
போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்

இந்த உலகில் நமக்கான அடையாளத்தை உருவாக்கிட ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள் நிச்சயம் வெற்றிபெறுவது உறுதி எனப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

`ஆனந்த விகடன்' மற்றும் `ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் நிறுவனம்' இணைந்து நடத்திய ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நேற்று (மார்ச் 01) திருச்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் என அறிவித்திருந்தாலும், காலை 7மணியிலிருந்தே திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல் தஞ்சாவூர் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் ஆர்வத்தோடு குவிந்தனர். முதலாவதாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உதவித்தொகை ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது.

`நமக்கான அடையாளத்தை உருவாக்குவோம்' - நம்பிக்கை தந்த போட்டித் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!
DIXITH

11 மணிக்கு, ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவராஜவேல், அந்நிறுவனத்தின் இயக்குநர் சாதிக், தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ் மற்றும் எழுத்தாளர் டாக்டர்.சங்கரசரவணன், தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர்.எம்.ரவி.ஐபிஎஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக மேடை ஏறினர். வழக்கறிஞர் முனியராஜ் தொகுத்திட வழிகாட்டவும் நம்பிக்கை அளிக்கவும் உரைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் பேசிய, சிவ ராஜவேல், ``பொதுத்தேர்வுக்குத் தயாராகிறவர்கள், முதலில் என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும். எதையும் நிதானமாக முறையாகப் படிக்க வேண்டும். குறிப்பாக வாசிப்புத்திறன் மிகமுக்கியம்.

ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான  ஆலோசனை முகாம்
ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்

உலகின் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள்தான். வாசிக்கத் தயாராக இருந்தால் சாமானியர்களும் சாதிக்கலாம்" என்று நம்பிகையளித்துப் பேசினார்.

அடுத்து பேசிய தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ், ``பெற்றோரின் கனவு, பிறரின் விருப்பம் உள்ளிட்ட பல காரணங்களால் நீங்கள் போட்டித்தேர்வுக்குத் தயாராகலாம். ஆனால், ஒன்று மட்டும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் முடிவு செய்தால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். எந்த வேலைகளிலும் கிடைக்காத மன நிறைவு ஆட்சிப் பணிகளில் கிடைக்கும்.

`நமக்கான அடையாளத்தை உருவாக்குவோம்' - நம்பிக்கை தந்த போட்டித் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!
DIXITH

கடந்த காலங்களைவிட யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்குத் தற்போது நிறைய வசதி வாய்ப்புகள் குவிந்துள்ளன. அவற்றைத் தயவுசெய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம்வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்களைப் படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இந்த உலகில் எல்லோரும் போலவே நாமும் பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் நமக்கான அடையாளத்தை உருவாக்குவதற்காக முயற்சி செய்யுங்கள். எங்கள் கிராமத்திற்கு இப்போதும் முறையான பேருந்து வசதியில்லை. என்னாலும் ஐ.ஏ.எஸ் ஆக முடிந்தது என்றால் உங்களால் நிச்சயம் முடியும்." எனத் தன்னையே முன்னுதாரணமாக்கிப் பேசினார்.

இறுதியாகப் பேசிய காவல் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எம்.ரவி, ``எல்லாம் கனவுபோல் இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் ஐ.பி.எஸ் ஆக வேண்டுமெனக் கனவு கண்டேன். ஆனால், நான் அடுத்தடுத்த காலகட்டங்களில் எனது இலக்கு மருத்துவராக வேண்டும் என மாறியது. ஆனால், எனது போதாத காலம், பி.எஸ்.சி அக்ரி படிக்க நேர்ந்தது. கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் படித்தேன்.

காவல் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எம்.ரவி
காவல் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எம்.ரவி
DIXITH

கல்லூரியில் படிக்கும்போது யு.பி.எஸ்.சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எழுதினேன். 1985களில் இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுத வயது வரம்பு இருந்தது. அப்போது கடுமையாகப் படித்தும் என்னால் தேர்ச்சி பெறமுடியவில்லை. பிறகு டெல்லியில் வங்கிப் பணி கிடைத்தது. கை நிறைய சம்பளம் நல்லவேலை. அங்கு எனக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில், யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாரான 14 பேரைத் தங்க வைத்துப் பயிற்சி வழங்கினேன்.

`ஒரு ரூபாய் செலவு செய்யாமல் ஜெயித்தோம்!' - உரக்கச் சொல்லும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

படித்த படிப்பு அவர்களுக்குப் பெரிதும் உதவியதால், இன்று நாடுமுழுக்க என் நண்பர்கள், இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார்கள் எனப் பெருமையாகச் சொல்வேன்.

இப்படியிருக்க 1990 ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு முறையில் வயது வரம்பு மாற்றம் செய்யப்பட்டது. அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். வங்கியில் பணியாற்றியபோது நண்பர்களுக்குப் பயிற்சி கொடுத்தது பேருதவியாக இருந்தது. ஆறே மாதம் கடுமையாக முயற்சி செய்தேன். அந்தத் தன்னம்பிக்கைதான் உங்கள் முன்பு நின்று பேசுவதற்கு வழி செய்தது.

`நமக்கான அடையாளத்தை உருவாக்குவோம்' - நம்பிக்கை தந்த போட்டித் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!
DIXITH
நீங்கள் எந்தத் தேர்வு எழுதத் தயாரானாலும் தேர்வுக்கான பாடத் திட்டங்களை முழுமையாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். இது ஒரு மாரத்தான் ஓட்டம் போல.
- டாக்டர் எம்.ரவி.ஐ.பி.எஸ்

சாதனையைத் தொடும்வரை தூக்கம், செல்போன், காதல் உள்ளிட்டவற்றைத் தள்ளி வையுங்கள். நீங்கள் எந்தத் தேர்வு எழுதத் தயாரானாலும், தேர்வுக்கான பாடத் திட்டங்களை முழுமையாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். இது ஒரு மாரத்தான் ஓட்டம் போல.. ஆரம்பத்தில் பங்கேற்பாளர்கள் அதிகம் இருப்பார்கள். இலக்கை நெருங்கும்போது, உடன்வருபவர்கள் அளவு குறையும். போட்டிதேர்வில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் எனப் பார்க்காமல், உங்களுக்கான இடத்தைப் பிடிக்க பிடிவாதமாக இருங்கள்" என முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு