கொரோனாவால் பொருளாதாரம் மட்டுமல்ல கல்வியும் திக்கற்று நிற்கிறது. பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மட்டும் நடந்த நிலையில், ‘பத்தாம் வகுப்புத் தேர்வுகள் எப்போது நடைபெறும், தேர்வு நடைபெறுமா... நடைபெறாதா?’ என்று சந்தேகத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் குழம்பித் தவித்தனர்.

இந்த நிலையில்தான், ‘பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பே இல்லை’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமல்ல... கொரோனாவால் இந்தியளவில் நடைபெறும் நீட், ஜே.இ.இ முதலான போட்டித்தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப் பட்டுள்ளன. அந்தத் தேர்வுகள் குறித்தும் குழப்பம் நீடிக்கிறது. ‘நீட், ஜே.இ.இ தேர்வுகள் ஜூன் மூன்றாவது வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள், தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்பதைக் காட்டுகின்றன. இதையடுத்து, ‘‘பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா பாதிப்பில் சிக்குண்டு கிடக்கின்றனர். அவர்களால் உடனடியாக மனதளவில் தேர்வுக்குத் தயாராக முடியாது. பயிற்சியே இல்லாமல் தேர்வு எழுத முடியாது. அதனால் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்’’ என ஒரு சாரார் கோரிக்கை விடுக்கின்றனர். இன்னொரு தரப்பினரோ, ‘‘கொரோனாவால் கிடைத்திருக்கும் இந்த விடுமுறையில் வீட்டிலேயே பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகள் என தொடர்ச்சியாக தங்களது உழைப்பைச் செலுத்தி மாணவர்கள் படித்துவருகின்றனர். ஒருவேளை தேர்வு ரத்துசெய்யப் பட்டால் இந்த மாணவர்களின் உழைப்புக்கு என்ன பதில்?’’ என்று கேள்வி எழுப்புகின்றனர். நீட், ஜே.இ.இ போன்ற போட்டித்தேர்வுகளிலும் இதே பிரச்னைதான். அதில் கூடுதலாக சில குழப்பங்களும் இருக்கின்றன.

கொடுங்கையூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கோகிலாவின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள். ஊரடங்கு, இந்த ஏழைக் குடும்பத்தை பொருளாதாரரீதியாக வெகுவாக பாதித்திருக் கிறது. இருந்தபோதும், ‘நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்து’ என்று தன் அம்மா சொல்வதாகச் சொல்கிறார் கோகிலா. ஆனால், கோகிலாவுக்கு உள்ளது போன்ற அரவணைப்பான சூழல் அவரின் நண்பர்களுக்கு இல்லை. வறுமை, குடும்ப வன்முறை போன்ற சிக்கலான சூழலுக்கு நடுவே பாடப்புத்தகத்தைத் திறந்தால், அவர்களால் எப்படிப் படிக்க முடியும்? நீட் தேர்வு எழுதக் காத்திருக்கும் கோச்சிங் கிளாஸ் செல்ல வாய்ப்பற்ற ஏழை மாணவர்களின் நிலையும் இதுதான். இதற்கு என்னதான் தீர்வு? கல்வியாளர்களிடம் பரிந்துரைகளைக் கேட்டோம்...

‘‘இந்தச் சூழல் நமக்குப் புதிது. ‘கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் பொது இடங்களில் தனிமனித விலகலைப் கடைப்பிடிக்க வேண்டும்’ என உலக சுகாதார மையம் தெரிவித் துள்ளது. பொதுத்தேர்வு வைத்தால் எப்படி தனிமனித விலகலைக் கடைப் பிடிக்க முடியும்? பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் வைத்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. போட்டித்தேர்வு களுக்குக்கூட பன்னிரண்டாம் வகுப்பில் ஐம்பது சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றாலே போதுமானது என்கின்றனர். அதையும் மீறி தேர்வு வைத்துதான் ஆக வேண்டுமென்றால், பதினொன்றாம் வகுப்பில் அவர்கள் தேர்வு செய்யவிருக்கும் பாடப் பிரிவின் அடிப்படையில் பள்ளி அளவிலேயே தேர்வு வைக்கலாம்.’’

‘‘பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை, மாணவர்கள் ஏற்கெனவே காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளை எழுதிவிட்டனர். எனவே, பொதுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, அரசின் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் அந்த மாணவர் களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் அவர்களுக்கு தேர்ச்சி தரலாம்.’’

‘‘பத்தாம் வகுப்புத் தேர்வையும் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளையும் நாம் வெவ்வேறு தளங்களில் அணுக வேண்டும். பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை மாணவர்கள் ஏற்கெனவே மாதிரித் தேர்வுகள் வரை எழுதியுள்ளனர். ஆனால், பள்ளி திறந்தவுடன் அவர்களுக்கு தேர்வு வைக்கக் கூடாது. குறைந்தபட்சம் பதினைந்து நாள்கள் அவகாசம் தர வேண்டும். அவர்கள் வகுப்புச் சூழலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்ட பிறகு தேர்வுகளை வைக்கலாம். மேலும் டிப்ளோமா போன்ற படிப்புகளுக்கு, பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்தான் தகுதியாகக் கருதப்படுகிறது. அதனால் பத்தாம் வகுப்புத் தேர்வு அவசியமாகிறது. ஆனால், அதை அரசின் கல்வியாண்டு அட்டவணைப்படிதான் வைக்க வேண்டும் என்றில்லாமல், மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தி அதற்கு ஏற்றார்போல் தேதிகளை அறிவித்து நடத்தலாம்.

நீட் போன்ற மற்ற தேர்வுகளை ரத்துசெய்வதைத் தவிர வேறு தீர்வு இல்லை. அதற்குப் பதிலாக அந்தந்த மாநிலங்கள் நீட் தேர்வுகளுக்கு முன்பு வரை எந்த அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றதோ அதே அடிப்படையில் இந்த ஆண்டு தொடர சொல்லலாம்.’’

‘‘மற்ற போட்டித்தேர்வுகளைப்போல் இல்லாமல் நீட் தேர்வுகளில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை எழுதும் மாணவர்களே அதிகம் பங்கேற்கின்றனர். கொரோனா காலத்தில் அவர்களில் சிலர், வீடுகளுக்குச் சென்றிருக்கக்கூடும். சிலர் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் தங்கிப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் விடுதியிலேயே அடைந்து கிடக்கக்கூடும். தமிழகத்தைப் பொறுத்தவரை, மூன்று மாத கோர்ஸ் முடித்து விட்டு நீட் எழுதும் மாணவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மார்ச் தொடங்கி மே வரையிலான மூன்று மாதங்களில் மட்டும்தான் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். தற்போது அவர்களுக்கும் பயிற்சிக்கான வாய்ப்பு இல்லை.

‘பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை முடித்துவிட்டு, மீண்டும் ஏப்ரலில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா பேரிடரால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியும் தற்போது இயலாததாகி இருக்கிறது. இவை அத்தனையும் கருத்தில் கொண்டு நீட் தேர்வை நடப்பு ஆண்டுக்கு ரத்துசெய்யச் சொல்லி சட்டப் பேரவையில் தமிழக அரசு தீர்மானம் இயற்றலாம். தேர்வை ரத்துசெய்வது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.

2017-ம் ஆண்டில் ஏமன் நாட்டில் காலரா நோய்த்தொற்று வேகமாகப் பரவியபோது, மக்கள் இதேபோன்று வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். 20 லட்சம் மாணவர்களுக்கு இதனால் கல்வி வாய்ப்பு பறிபோனது. ஆனால், ஏமன் மாணவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவிக்கரம் நீட்டியது. தன்னார்வ கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அந்த நாட்டுக்கான அவசரக்கால கல்வித்திட்டத்தைச் செயல்படுத்தியது. கொரோனாவால் தற்போது இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் இதே போன்ற ஒரு சூழலைத்தான் எதிர்கொண்டுவருகின்றனர். தேர்வுகளை ரத்துசெய்வதும் அதற்கான மாற்றுகளை யோசிப்பதும் தற்காலிகத் தீர்வாக இருக்குமேயொழிய, இதுபோன்ற பேரிடர் கால கல்விக்கான நிரந்தரத் தீர்வுக்கு சர்வதேச நாடுகள் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது.’’